மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னை, ஜூன் 8- சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட் டத்தை கைவிடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள மேல் முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென்று இந்திய தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் விவ சாயிகள் நலன்களுக்கு விரோதமான இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறது.
ஐந்து மாவட்ட விவசாயிகளின் தொடர் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் நடத்திய பல கட்ட போராட்டத்தின் விளைவாக எட்டு வழிச்சாலை தொடர்பான பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பில் ‘’இத்திட்டம் தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்யாமலும், அவசர கோலத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், சுற்றுச் சூழல் ஒப்புதல் முன்கூட்டியே பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், வனங் கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இத்திட்டம் தொடர்பான அரசின் அறிக்கையை ரத்து செய்ததுடன், இத்திட் டத்தை செயல்படுத்த தடை விதித்தும் 8.4.2019 அன்று தீர்ப்பளித்தது’’.
மத்திய அரசு 2019 ஜீலை 3ல் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளின் கோரிக்கை யாகும்.
சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரி வித்திருப்பது நீதிமன்ற அவமதிப்புக் குற் றத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.