tamilnadu

img

குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி

சென்னை, ஏப்.19- மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ்  குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி வழங்கப்  பட உள்ளது. தமிழகத்தில் 2 கோடியே ஒரு லட்சம் அரிசி  பெறும் குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த  குடும்ப அட்டைகள் முன்னுரிமை, முன்னுரி மையற்றவை என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

அதன்படி 80 லட்சம் முன்னுரிமை அட்டை களில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாதம் தலா 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. முன்னுரிமையற்ற ஒரு  கோடியே 2 லட்சம் குடும்ப அட்டை தாரர்க ளுக்கு அதிகபட்சம் 20 கிலோ இலவச அரிசி  வழங்கப்படுகிறது. மிகவும் ஏழைகளாக உள்ள 19 லட்சம் முன்னுரிமை அந்தயோதையா  அன்ன யோஜனா கார்டுகளுக்கு அதிகபட்சம்  35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழை மக்களுக்கு ரே‌ஷனில் கூடுதல் அரிசி வழங்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி கூறியதாவது:-

மத்திய அரசின் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ்  அந்தியோதையா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு ஏப்ரல் மாதம் முதல்  ஜூன் மாதம் வரை நபர் ஒருவருக்கு கூடுத லாக தலா 5 கிலோ அரிசி வழங்க உத்தர விட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவை ஏற்று தமிழ கத்தில் அன்னயோஜனா குடும்ப அட்டை தாரர்களுக்கு 35 கிலோ அரிசியுடன் ஒரு அட்டையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ள னரோ அத்தனை பேருக்கும் கூடுதலாக தலா  5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். அதேபோல முன்னுரிமை குடும்ப அட்டை தாரர்கள் நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்.

அதற்கு ஏற்ற வகையில் மே மாதம் ரே‌ஷனில் வழங்க 5.89 லட்சம் டன் அரிசி, 13  ஆயிரத்து 485 டன் கோதுமை ஒதுக்குமாறு  வாணிப கழகத்துக்கு உத்தர விடப்பட்டுள் ளது. இந்த பொருட்களை வருகிற 30  ஆம்  தேதிக்குள் கடைகளுக்கு அனுப்ப அறிவு றுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இலவச அரிசி வழங்க வேண்டும் என்று  சனிக்கிழமையன்று (ஏப். 18) மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்  ணன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.