tamilnadu

img

3 நாட்கள் சட்டமன்றக் கூட்டம்

சென்னை, ஜன. 6- தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து  மூன்று நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. பதினைந்தாவது சட்டப்பேரவையின் 8 வது கூட்டத் தொடர் ஜனவரி 6ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். பின்னர் சட்டப் பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் துரைமுரு கன், சக்கரபாணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது  அபுபக்கர், ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டப் பேரவைத் தலைவர்  தனபால்,"ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜனவரி 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விவாதம் தொடங்கு கிறது. அன்றைய தினம் மாலையிலும் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது" என்றார்.

7 ஆம் தேதி காலை கூட்டம் துவங்கியதும் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர்கள் மற்றும் பேரவையின் முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 8ஆம் தேதி புதன்கிழமையும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக விவாதம் நடைபெறும் என பேரவைத் தலைவர் தெரிவித்தார். ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மா னத்தின் மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் பதில் அளிக்கிறார். 2019-20 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது துணை நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் மசோதாக்கள் ஆய்வு செய்து  நிறைவேற்றப்படும் என்றும் பேரவைத் தலைவர் தனபால் கூறினார்.

;