சென்னை, மார்ச் 2- தமிழகச் சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் மார்ச் 9 முதல் ஏப்ரல் 9 வரை மொத்தம் 25 நாட்கள் நடைபெறும் என பேர வைத் தலைவர் ப.தனபால் தெரி வித்துள்ளார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. அப் போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், துறை ரீதி யான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக, மார்ச் 9 ஆம் தேதி சட்டப் பேரவை மீண்டும் கூடுகிறது என்று செயலாளர் சீனிவாசன் அறி வித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமையில் திங்க ளன்று (மார்ச் 2) நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மார்ச் 9-ல் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் தனபால், மார்ச் 9 ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வரை நடைபெறு கிறது” என்றார்.
கூட்டத்தொடரின் முதல் நாள், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. சந்திரன், திமுக உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, எஸ். காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது. மார்ச் 11 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் அமைச்சர்க ளின் பதிலுரையும் இடம்பெறும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.
மானியக் கோரிக்கை விவாதம்
மார்ச் 11- வனம்,சுற்றுச்சூழல்
மார்ச் 12- பள்ளிக் கல்வி, உயர்க் கல்வி, இளைஞர் நலன்
மார்ச் 13- மின்சாரம், மதுவிலக்கு
மார்ச் 16- உள்ளாட்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம்
மார்ச் 17- மீன்வளம், பணியாளர் நலன், கால்நடை
மார்ச் 18- நெடுஞ்சாலை,பொதுப்பணித்துறை
மார்ச் 19- கூட்டுறவு, உணவு
மார்ச் 20- சட்டம், நீதி நிருவாகம், சிறை
மார்ச் 21- சத்துணவு, மாற்றுத்திறனாளிகள், பிசி, எம்பிசி
மார்ச் 23- இறுதி துணை நிலை அறிக்கை
மார்ச் 24 - தொழில்துறை, சிறு,குறுந்தொழில்கள்
மார்ச் 26- கைத்தறி, செய்தி விளம்பரம்
மார்ச் 27- காவல், தீயணைப்பு
மார்ச் 30- காவல், தீயணைப்பு, வணிகவரி,பால்வளம்
மார்ச் 31- வேளாண்மை
ஏப்ரல் 1- வருவாய், தகவல் தொழில்நுட்பவியல்
ஏப்ரல் 2 - மக்கள் நல்வாழ்வுத்துறை
ஏப்ரல் 3 - சுற்றுலா, இந்து சமயம்
ஏப்ரல் 4 - தொழிலாளர் நலன், கதர் கிராமத்தொழில்கள்
ஏப்ரல் 7 - போக்குவரத்து
ஏப்ரல் 8 - எஸ்சி/எஸ்டி, தமிழ் வளர்ச்சி
ஏப்ரல் 9- பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம்,
ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்