tamilnadu

img

இந்து - முஸ்லிம் ஒற்றுமையை கைவிட்டு இந்துத்துவாவுக்கு பயணித்த சாவர்க்கர்! - அ.அன்வர் உசேன்

சாவர்க்கருக்கு பாரத ரத்னா பட்டம் தரப்பட வேண்டும் என மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க. தன் தேர்தல் அறிக்கையில் கோரியுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்னால் அமித்ஷா வாரணாசியில் பேசும் பொழுது  சாவர்க்கர் இல்லையெனில் 1857 கிளர்ச்சி வெளி உலகத்துக்கு தெரிந்திருக்காது எனவும் இந்த கிளர்ச்சி பற்றி பிரிட்டிஷாரின்  கூற்றையே நாம் நம்பி இருப்போம் எனவும் கூறினார். மேலும் சாவர்க்கர்தான் இந்த கிளர்ச்சிக்கு இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என பெயரிட்டார் எனவும் கூறினார். வரலாற்று உண்மைகளைத் திரித்துப் பேசுவதும் எழுதுவதும் சங்பரிவாரத்தினருக்கு கை வந்த கலை. இன்று இந்த கலையை மிக தீவிரமாக அவர்கள் பயன்படுத்துகின்ற னர். குறுகிய காலத்திற்குள் இந்திய பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றை இந்துத்துவ ஒற்றைச் சிமிழுக்குள் அடக்குவதற்கு பெரும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் 1857 கிளர்ச்சி பற்றி அமித்ஷாவின் கூற்று. சாவர்க்கருக்கு பாரத ரத்னா பட்டம் சூட்டுவதற்கு சில பொய்யான பின்னணிகளை உருவாக்கும் முயற்சியாகவும் இது இருக்கலாம்.

1857 கிளர்ச்சி- முதலில் உலகிற்கு தெரிவித்தது காரல் மார்க்ஸ்  

1857 கிளர்ச்சி குறித்து முதன் முதலில் உலகுக்கு தெரி வித்தது காரல் மார்க்சும் ஏங்கெல்சும் என்பதுதான் உண்மை. சாவர்க்கர் பிறந்தது 1883ஆம் ஆண்டு. ஆனால் 1857-58ம் ஆண்டுகளில் அதாவது சாவர்க்கர் பிறப்பதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே காரல் மார்க்ஸ் நியூயார்க் டெய்லி  டிரிபியூன் எனும் பத்திரிகைக்கு இந்த கிளர்ச்சி பற்றி பிர மிக்கத்தக்க அளவில் துல்லியமாக பல ஆய்வுக் கட்டுரை களை எழுதினார்.  கிளர்ச்சியாளர்களை ஆதரித்து எழுதியது மட்டுமல்ல; இது பிரிட்டிஷார் கூறுவது போல வெறும் சிப்பாய்கள் கலகம் அல்ல; மாறாக இலட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் தேசிய கிளர்ச்சி எனவும் மார்க்ஸ் அழுத்தம் திருத்த மாக முன்வைத்தார். கிளர்ச்சியாளர்களுக்கு பிரிட்டிஷார் இழைத்த காட்டுமிராண்டித்தனமான கொடூரங்களையும் மார்க்ஸ் அம்பலப்படுத்தினார். 

நவீன ஆயுதங்களையும் போர் முறைகளையும் கொண்ட பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய பலவீனங்களை மார்க்சிய ஆசான்கள் விமர்சித்தனர். உதா ரணத்திற்கு கிளர்ச்சியாளர்களிடையே ஒரு மையப்படுத்தப் பட்ட இராணுவத் தலைமை இல்லாததை சுட்டிக்காட்டினர். மழைக் காலத்தில் பிரிட்டிஷ் படையினர் முகாம்களில் அடைந்து கிடந்தனர். அப்பொழுது ஏன் அவர்களின் முகாம் களை கிளர்ச்சியாளர்கள் தாக்கவில்லை எனவும் ஏங்கெல்ஸ் கேள்வி எழுப்பினார். 1857 கிளர்ச்சி வெல்ல வேண்டும் என மார்க்சும் ஏங்கெல் சும் விரும்பினர்; அதனை பகிரங்கமாக எழுதினர். எனவே இந்த கிளர்ச்சி தோற்ற பொழுது வருத்தம் அடைந்தனர். இந்த மகத்தான கிளர்ச்சி தோற்றாலும் இது இந்திய விடுதலை போராட்டத்தின் முன்னுரை; விரைவில் விடுதலை வேட்கை தீயெனப் பரவும் என துல்லியமாக கணித்தனர். ஆகவே சாவர்க்கர்தான் முதலில் 1857 கிளர்ச்சி பற்றி எழுதினார் என்பது பொய். ஆனால் அமித்ஷா வகையறாக்கள் பொய்க ளை பற்றி எப்பொழுது கவலைப்பட்டனர்?

1857 கிளர்ச்சிதான் முதல் விடுதலைப் போரா?

அமித்ஷா எழுப்பும் இன்னொரு பிரச்சனை சாவர்க்கர் தான் 1857 கிளர்ச்சியை முதல் விடுதலைப் போர் என நாம கரணம் சூட்டினார் என்பதாகும். உண்மையில் 1857 கிளர்ச்சி தான் முதல் விடுதலைப் போரா? இந்த கருத்தாக்கத்தை பின்னுக்குத் தள்ளும் வகையில் பல வரலாற்று ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதில் தமிழகத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய கிளர்ச்சிகள் உள்ளன. ஒன்று 1801ஆம் ஆண்டு மருது சகோதரர்கள் ஆங்கிலே யர்களுக்கு எதிராக நடத்திய போர். 1801ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் சின்ன மருது தனது புகழ் பெற்ற ‘திருச்சி அறை கூவலை’ வெளியிடுகிறார். இது திருச்சியின் நவாப் அரண் னை வாயிலிலும் ஸ்ரீரங்கம் கோவிலின் வாயிலிலும் பகிரங்க மாக ஒட்டப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு எவருக்கு என்பதில் கீழ்கண்டவாறு கூறப்பட்டிருந்தது:

“பல்வேறு சாதிகள், தேசங்கள், பிராமணர்கள், சத்திரி யர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் ஆகிய அனைவருக்கும் இந்த அறிவிப்பு தரப்படுகிறது” மருது சகோதரர்களின் போராட்டம் தோல்வி அடைந்த பிறகு நாடு கடத்தப்பட்டோரின் பட்டியலில் மருதுவின் மகன்க ளுடன்  ஷேக் உசேன் போன்ற திண்டுக்கல் பகுதியை சேர்ந்த முஸ்லிம்களும் இருந்தனர்.  1806ஆம் ஆண்டு வேலூர் சிறையில் நடந்த கலகத்தில் அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த திப்புவின் மகன்களும்  பங்கேற்றனர். கலகம் வெற்றி பெற்றால் மைசூருக்கு திப்புவின் மகனை அரசராக்குவது எனவும் ஹைதராபாத் நிசாமுக்கு மீண்டும் அரசாட்சியை தருவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கிளர்ச்சியில் இந்துக்கள் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு போராடினர்; உயிர்த் தியாகம் செய்தனர். (-Secret Sundries for 1806/p:546/vol1/The South Indian Rebellion- first war of Indepenedence /Rajayyan/p:290) இந்த கிளர்ச்சிகள் 1857ஆம் ஆண்டுக்கு முன்னரே நடந்த வை! இன்னும் பல கிளர்ச்சிகள் இவ்வாறு நடந்திருக்கவும் அது பற்றிய ஆய்வுகள் வெளிவரவும் வாய்ப்பு உண்டு. இந்த கிளர்ச்சிகளில் கவனிக்கத்தக்க அம்சம் இந்து- முஸ்லிம் ஒற்றுமை ஆகும்.

1857 கிளர்ச்சியும் சாவர்க்கரும்

1857 கிளர்ச்சியை சாவர்க்கரும் ஆவணப்படுத்தினார் என்பது உண்மையே! ஆனால் அமித்ஷா மறைக்கும் மிக முக்கியமான உண்மை என்னவெனில் அப்பொழுது சாவர்க்கர் தேச விடுதலைக்கான போராளியாக மட்டுமல்ல; இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக குரல் கொடுப்பவராகவும் இருந்தார். அதாவது அந்தமான் சிறையில் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுப்பதற்கு முன்பு; இந்துத்துவா நச்சு கருத்தாக்கத் தை அரவணைத்து கொண்டதற்கு முன்பு! 1857 கிளர்ச்சி தொடர்பான The Indian war of independ ence 1857 எனும் நூலை சாவர்க்கர் யாருக்கு அர்ப்பணம் செய்துள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்: மங்கள் பாண்டே, ராணி லட்சுமி பாய், நானா சாகேப், மவுல்வி அகமது ஷா, அசிமுல்லாகான், தாந்தியா தோபி, பகதூர் ஷா ஜாஃபர், பேகம் ஜீனத் மகால் - என இந்த பட்டியல் இந்து மன்னர்கள் மற்றும் முஸ்லிம் மன்னர்களின் பெயர்களை உள்ளடக்கியுள்ளது.  குறிப்பாக இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உருவாக்க நானா சாகேப் மற்றும் அசிமுல்லாகான் நடைமுறைப்படுத்திய கொள்கை களை சாவர்க்கர் பெரிதும் பாராட்டுகிறார். மேலும் சாவர்க்கர் கூறுகிறார்:

“அனைத்து சாதி மற்றும் மதங்களை சார்ந்த மவு லிக்கள், பண்டிட்டுகள், ஜமீன்தார்கள், விவசாயிகள், வழக்கறி ஞர்கள், மாணவர்கள் என அனைவரும் விடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர்” என சாவர்க்கர் விவரிக்கிறார். -The Indian war of independence 1857/பக்:76-88. தாமஸ் லோவே எனும் இராணுவ அதிகாரி ஜான்சி ராணியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவர். அவர் கூறுகிறார்:

“சிசுக்கொலையில் ஈடுபடும் இராஜபுத்திரரும், சகிப்புத்தன் மையற்ற பிராமணரும், சமய வெறி பிடித்த முஸல்மானும், ஆடம்பரத்தில் மிதக்கும் மராட்டியர்களும் ஆகிய அனைவரும் இந்த கலகத்தில் ஒன்றுபட்டுள்ளனர்.  பசுவை கொல்பவனும் பசுவை சாப்பிடுபவனும், பன்றியை வெறுப்பவனும் பன்றியை சாப்பிடுபவனும், அல்லாதான் கடவுள் என்று கத்துபவனும் புரியாத மந்திரங்களை சொல்கின்ற பிராமணனும் இதில் ஒரே அணியில் நின்றுள்ளனர்.”   -Lowe Thomas/Central India during the rebellion of 1857 and 1858 இத்தகைய இந்து - முஸ்லிம் ஒற்றுமைதான் அன்று நிலவி யது. இந்த உண்மையைதான் சாவர்க்கர் தனது நூலில் பிரதிபலித்தார். ஆனால் அன்று சாவர்க்கர் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஆதரிப்பவராக இருந்தார்.

அது வேற வாய்! இது ...!?

இதே சாவர்க்கர்தான் 1937ஆம் ஆண்டு அகமதாபாத் இந்துமகாசபை கூட்டத்தில் உரையாற்றிய பொழுது கீழ்க் கண்டவாறு தெளிவாகக் கூறினார்: “இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. (இந்த இரண்டு தேசங்களும்) ஒன்றாகக் கூடி வாழ்கின்ற நாடாக இந்தியா உள்ளது என்றோ அல்லது இரண்டு தேசங்களையும் ஒன்றுபடுத்திவிட முடியும்  என்றோ சில சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர். அது மிகப்பெரிய தவறு ஆகும்” அவர் மேலும் கூறுகிறார்:

“இந்தியா ஒரே தேசமாக அல்லது ஒற்றைத் தன்மை கொண்ட தேசமாக உள்ளது என்று கருத முடியாது. மாறாக இரண்டு தேசங்கள் இந்தியாவில் உள்ளன. ஒன்று முஸ்லிம் கள் தேசம்; மற்றொன்று இந்துக்கள் தேசம்” மேலும் ஜெர்மனியில் நாஜிக்கள் சிறுபான்மையினரான யூதர்களை கொன்று குவித்ததை நியாயப்படுத்திய சாவர்க்கர் இந்தியாவிலும் அவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக செய்ய வேண்டும் என பகிரங்கமாகக் கூறினார். கோவில்களில் சூத்தி ரர்கள் நுழைவதை கடுமையாக எதிர்த்தார். காந்திஜி படு கொலையின் சதித் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டார். 

தன்வாழ்நாளில் பெரும்பான்மையான காலத்தை இந்துத்துவா கருத்தாக்கம் உருவாக்கவே சாவர்க்கர் செயல்பட்டார். எனவேதான் இந்துத்துவாவின் பிதாமகர்க ளில் ஒருவராக கருதப்படுகிறார். முகம்மதலி ஜின்னாவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுத்தால் எவ்வளவு கொடுமையான தோ எவ்வளவு கேலிக்கு உரியதோ அதே அளவிற்கு கொடூர மானது சாவர்க்கருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்க முயல் வது! ஏனெனில் ஜின்னாவும் சாவர்க்கரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஒருவர் முஸ்லிம் மதவாதத்தை முன்வைத் தார்; மற்றொருவர் இந்துத்துவாவை முன்வைத்தார். சாவர்க்கருக்கு பாரத ரத்னா என்பது இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத்திற்கு மிகப்பெரிய  இழுக்கு எனில் மிகை அல்ல!


 

;