tamilnadu

img

மக்களை கை கழுவுகின்றனவா மத்திய, மாநில அரசுகள்? - எஸ்.சுனில்குமார்

ஜனவரி  30 -ல் இந்தியாவில்   நோய் தொற்று தொடங்கி இன்றுவரை  அதன்  தொற்று சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மத்திய அரசு  முதல் ஊரடங்கு அறிவிப்பின் போது உயிர் தான் முக்கியம்,  வாழ்வாதாரத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவை  எடுத்தது.

மொத்தமாக ஒரு நாள் மக்கள்  ஊரடங்குடன் சேர்த்து 55 நாட்கள் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை 99 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான மக்கள் பின்பற்றி வந்தார்கள்.  130   கோடிக்கும்  அதிகமாக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் மக்களை ஊரடங்கு   உத்தரவு மூலம் வெளியே வர விடாமல் செய்தது அரசு.

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய  பிரதமர் மோடியின் செயல்பாடு உலகம் முழுவதும் பாராட்டப்பட்டதாக பல செய்தி ஊடகங்கள் வழியாக ஆர்எஸ்எஸ், பிஜேபி நபர்கள் தினந்தோறும் வாக்கெடுப்பு கணக்குகளை காட்டி புகழ்ந்து தள்ளினர். இரண்டாவது ஊரடங்கு தொடங்கி சில நாட்களிலே உயிரும்  வாழ்வாதா ரமும்  சேர்ந்தே கவனிக்க வேண்டியது என மத்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என கூறப்பட்டது.

 மூன்றாவது ஊரடங்கு என்பது    வாழ்வு தான் முக்கி யம் எனும் நோக்கு அரசின் நடவடிக்கையால் உறுதி யானது. ஊரடங்கு பெயரளவுக்கு  தான் என்பது  போல  தளர்வுகள் மூலம் பொது போக்குவரத்து தவிர அனைத்தும் சில கட்டுப்பாடுகளுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

சமீப நாட்களில் ஊடகங்கள் வாயிலாக மறைமுகமாக மற்றும் சில அரசியல் தலைவர்கள் நேரடியாக  எவ்வளவு நாள்தான் இதற்கு   அரசுபொறுப்பு ஏற்க முடியும். எனவே பொதுமக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வது அவர்களின் பொறுப்பு என பல வியாக்கியானங்கள் மூலம் தொடர்ந்து திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.  இதன் நோக்கம்,  பொதுமக்கள் அரசு வழிகாட்டுதலை மீறியதால் தான் இந்த தொற்று அதிகரித்தது போலவும் நிர்வாகம் இதுவரை சிறப்பாக செயல்பட்டது போலவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பொதுமக்கள் அரசுக்கு உதவவில்லை என்ற விஷயத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

 பொது மக்களின் செயல்பாடுகள் 

அரசின் உத்தரவை  மீறவில்லை என்பதற்கு இதோ சில உதாரணங்கள்….

 முதல் நாள் மார்ச் 24 முழு  ஊரடங்கு  99.9 மக்கள் பேராதரவோடு முழு வெற்றி என அரசின் அறிவிப்பில் கூட இடம்பெற்றது.

 அடுத்த ஊரடங்கு அரசால்  மார்ச்  25 முதல் ஏப்ரல் 14 வரை சிறிது நேர இடைவெளியில்  அறிவித்தாலும், அரசு  அறிவித்த மளிகை, காய்கறிக் கடைகள் கூட நேரக் கட்டுப்பா டுடன் திறக்கப்பட்டது. அந்த நேரம் தவிர வெளியே வராமல் இருந்தனர்.

அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்த நாள் முதல் இன்றுவரை பழைய துணியையாவது முகத்தில் கட்டிக்கொண்டு தான் வெளியில் வருகிறார்கள்.

 பிழைப்பிற்காக வேறு மாநிலங்களில் தினக் கூலி களாக சென்ற மக்கள், அனைத்து வருமானங்களும் அடைக்கப்பட்ட நிலையில் கூட்டமாக தில்லி மற்றும் பல நகரங்களில் இருந்து கைக்குழந்தை மற்றும் சில உடைமை களை மூட்டையாக கட்டிக்கொண்டு  நடந்தே வெளியே வந்ததும், அரசு அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை முறையாகச் செய்யாததும்தான் என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகும்.

 ரேசன் கடை, மளிகை மற்றும் காய்கறிக் கடைகளில் சமூக இடைவெளி அரசு பிறப்பித்த வட்டத்துக்குள் வரிசை யாக நின்று அரசின் உத்தரவை முழுமையாக கடைப் பிடித்தனர்.  நான் சினிமா பார்க்க  திரையரங்குக்கு செல்ல வேண்டும் என யாரும் உரிமை கோரவில்லை.

 அனைத்தையும்  தீர்ப்பவர்  என்ற கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கூட  வழிபாட்டுத் தலங்களுக்கு போய் தான் ஆக வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. பல வீடுகளில் திருமணங்கள் ஒத்திவைத்தது அல்லது அரசின் அறிவிப்பின்படி 20 நபர்களுக்கு உள்ளாக நிகழ்ச்சி களை நடத்தி முடித்தது என்பதும் இந்தக் காலம்தான்.

 சிலர் வீடுகளில் இறப்புச் செய்திகளைக் கூட மிக முக்கிய சொந்தங்களுக்கு மட்டும் தெரிவித்து கூட்டம் கூடு வதை தவிர்க்க அரசின் ஆணையை பின்பற்றியது இந்தக் காலம்தான்.  மருத்துவத்திற்குக் கூட அருகில் உள்ள பல தனியார் மருத்துவர்கள் அல்லது மருத்துவமனைகள் செயல்படாத நிலையில் அவசரத்தேவை தவிர வீட்டு மருத்துவம் மூலம் வெளியில் வராமல் தவிர்த்தார்கள் பொதுமக்கள். மதுக்கடைகளை அரசு மூடி வைத்த பொழுது மதுப் பிரியர் கள் இவ்வளவு நாள் அதை மறந்து அரசுக்கு ஆதரவு அளித்தனர்.

ஓட்டுனர்கள் மற்றும் பல கூலி வேலை செய்பவர்கள், தள்ளுவண்டிகள் மூலமாக காய்கறி, பழம் வியாபாரம் செய்து தன் வாழ்வாதாரத்தை ஓரளவுக்குத்  பாதுகாத்துக்  கொண்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.   தனி மனிதர்கள் மற்றும்  தன்னார்வலர்கள் அடுத்த வேளை உணவுவின்றி தவித்த மக்களுக்காக அரசு அறிவித்ததை விட அதிகமாக உதவி செய்து பட்டினிச் சாவு இல்லாமல் பாதுகாத்தது மிக முக்கியமானது.

 அரசுகள் செய்ய மறந்தது

 முதல் ஊரடங்கிலிருந்து வாழ்வாதாரமும்  உயிரும்  முக்கியம் என்ற குறிக்கோளை நோக்கிச் செல்லாமல், மக்க ளின் மற்றும்  அரசின் வருமானத்தையும் இந்தியாவின் வளர்ச்சியையும் முடக்கிப் போட்டது.  இடம்பெயர்ந்து வேலை செய்யும்   தொழிலாளர்களின் வாழ்க்கையை கவனம் கொள்ளாதது.

 அத்தியாவசியப்  பொருட்கள் தடையின்றி வழக்கம் போல் கிடைக்க ஏற்பாடு செய்யத் தவறியது.

 மத்திய அரசு உலக பேரழிவு  என  அறிவித்த இந்தத் தொற்று காலத்தில் தன்னுடைய ஜிடிபியில் இருந்து 0.87 சதவீதம் மட்டும் மக்களுக்கான  நிவாரணம் அறிவித்தது.  எத்தனை  காலம்  தொற்று இருக்கும்  என்ற நீண்ட  காலத் திட்டமிடலுக்குப் பதிலாக முதலிலே பொருளாதா ரத்தை முடக்கியது, சில தளர்வுகளுடன் முதலில் அமல் படுத்த வேண்டிய ஊரடங்கு தலைகீழாக முதலில் முழுமையான ஊரடங்கு பின்னர்  தளர்வு ஊரடங்கு என தவறாக வழிகாட்டியது.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் குடும்ப திருமண விழாவில் அதிக அளவில் கலந்து கொண்டது.  எடியூரப்பா அரசின் அமைச்சர் இல்ல  திருமண விழாவில் முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டது.

 தமிழகத்தில் சென்னை உட்பட 5 நகர் முழு ஊரடங்கு என நேரம் கொடுக்காமல் அறிவித்ததால் அடுத்தநாள் மக்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடு மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் கூடியது.  இதிலும் மத அரசியலை செய்ய தவறாத மத்திய அரசு தப்லீக் அமைப்பினர் நடத்திய மாநாடு பற்றிய மிகை யான செய்திகளை பரப்பி அதற்கு தமிழக அரசும் துணை போனது. 

அரசின் புள்ளி  விவரங்களிலிருந்து

 மார்ச் 20 அன்று  பாதிக்கப்பட்டவர்கள் 332 பேர்.

 ஏப்ரல் 14 அன்று பாதிக்கப்பட்டவர்கள் 10 ஆயிரத்து 363, இழப்பு 339

3 மே அன்று  பாதிக்கப்பட்டவர்கள் 42 ஆயிரத்து 496, இழப்பு 1389

தற்போது  பாதிக்கப்பட்டவர்கள் 56  ஆயிரத்து 346 ஆயிரம், இறப்பு 1886. இந்த விபரத்தின்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 10 ஆயிரத்தை தொட 74 நாட்கள் ஆனது, இன்று ஐந்து நாட்களில் 10 ஆயிரத்தை கடந்து கொண்டிருக்கிறது. இழப்பு விகிதம்  அதிகரித்துக்  கொண்டிருக்கிறது.

 இன்னும் கூடுதலாக இன்றைய தினம் எய்ம்ஸ் அறிக்கையின்படி ஜூலை மாதம் வரை தொற்று மிக அதிகமாக இருக்கும் என்ற செய்தி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.  ஆனால் மத்திய, மாநில அரசுகள் மக்கள் அறிகுறி இன்றி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இல்லங்களிலேயே இருந்து சிகிச்சை  பெற்றுக்கொள்ளலாம் என்று வழி  வழிகாட்டுகிறது.

 குறைவான தொற்று உள்ள காலங்களில்  மக்களோடு  நின்ற அரசு, இன்று அதிகளவு தொற்று ஏற்படும் பொழுது தன் பொறுப்பிலிருந்து விடுபடுவது கொரோனா பாது காப்பிற்கு அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவினால் சரியாகும் என்பதைப்போல அரசு மக்களுக்கானது என்ற பொறுப்பிலிருந்து  வெளியேறுவது போல உள்ளது.  கொரோ னா தொற்று அதிகரிக்கும் இந்த வேளையில் அரசு மக்க ளோடு  இருக்க வேண்டும்   என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.




 

;