tamilnadu

img

உலகக் கோப்பை கிரிக்கெட் சிறப்பு

12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 3 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து அணி அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 397 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும்.விண்டீஸ் அணிக்கெதிராக பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டதே மிகக் குறைந்த இலக்காகும். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்து ரோஹித் சர்மா 5 சதங்கள் விளாசி சாதனையுடன் 648 குவித்து முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனிநபராக 166 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் மொத்தம் 675 விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டன. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க் 27 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் பிடித்தார். கடந்த தொடரை காட்டிலும் இந்த தொடரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன. மொத்தமாக 359 சிக்ஸர்களும், 1983 பவுண்டரிகளும் விளாசப்பட்டன. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி 76 சிக்ஸர்களை 283 பவுண்டரிகளையும் நொறுக்கி முதலிடத்தை பிடித்தது.

கணிப்புகள்!

ஐரோப்பா கண்டத்தின் செல்வச் செழிப்புமிக்க நாடான இங்கிலாந்து மற்றும் பிரிட்டனில் அங்கம் வேல்ஸ் பகுதிகளில் 12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. மே மாதம் 30-ஆம் தேதி துவங்கிய இந்த திருவிழாவில்  அதிரடிக்கும், ஆக்ரோஷத்திற்கும் பஞ்சமில்லாமல் ஞாயிறன்று (14-ஆம் தேதி) நிறைவு பெற்றது. இந்த திருவிழாவில் 10 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு தலா ஒரு முறை (ரவுண்ட் ராபின்) விளையாடின. கணிப்புகளுக்கு ஏற்ப இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

கம்பீர நடை...

லீக் சுற்றின் 48 ஆட்டங்களில் 4 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் கைவிடப்பட்டு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. அதிகம் எதிர்பார்த்த தென் ஆப்பிரிக்கா அணி பொறுப்பில்லாத ஆட்டத்தால் தொடரிலிருந்து தொடக்க த்திலேயே வெளியேறியது. கிரிக்கெட் உலகிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் என எதிர்பார்த்த, ஆப்கானிஸ்தான் அணியும், கத்துக்குட்டி பெயருக்கு ஓய்வு அளித்து வலுவான அணியாக வளர்ந்த வங்க தேசம், முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான், விண்டீஸ் அணிகள் எதிர்பார்த்ததை போல லீக்கோடு வெளியேறியது. 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து இந்தியாவும் 14 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியாவும் எவ்வித சிரமமுமின்றி அரையிறுதிக்கு கம்பீரமாக நுழைந்தன. கடைசி லீக் ஆட்டங்களில் வாழ்வா? சாவா? என்று போராடிய இங்கிலாந்து அணி ஒருவழியாக தப்பிப் பிழைத்து 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும், தலா 11 புள்ளி களுடன் பாகிஸ்தானிடம் மல்லு கட்டிய நியூசிலாந்து ரன்ரேட் அடிப் படையில் நான்காவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தன. கடைசியாக இந்த இரு அணிகள்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் இரண்டு இடம்பிடித்த இரு அணிகள் அரையிறுதி ஆட்டத்தோடு வெளியேறிவிட்டதால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

மகுடம்

இங்கிலாந்து பேட்டிங்கிலும், நியூஸிலாந்து பந்துவீச்சிலும் பலமாக இருந்ததால் இறுதி யுத்தத்தில் வெல்லப் போவது யார்? என்ற பரபரப்புக்கு இடையே பூவா? தலையா? போட்டதில் வென்ற நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் உயிரோட்டமாக (பந்துவீச்சுக்கு)  இருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் நியூஸிலாந்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். இதனால் நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

நியூஸிலாந்தின் பதிலடி
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக சேசிங் செய்வதில் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் இங்கிலாந்து வீரர்கள் மிக எளிதில் இலக்கை எட்டி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் கானல் நீரைப் போன்று காணாமல் செய்தனர். இங்கிலாந்தை வீழ்த்த திட்டமிட்டுச் செயல்பட்ட கேப்டன் மற்றும் திட்டத்திற்கு ஒத்துழைத்த நியூஸிலாந்து வீரர்களை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாது. 

பரிதாப நிலை...
சரிந்து கொண்டுவந்த இங்கிலாந்திற்கு நம்பிக்கை ஒளி கொடுத்த ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை கழற்ற முடியாமல் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். தோல்வியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்திற்கு ஆட்டத்தின் கடைசி ஓவரில் தேவையில்லாமல் நான்கு ரன்களை (எக்ஸ்ட்ரா)  ஆடி தள்ளுபடி யாக நியூஸிலாந்து அணி கொடுக்க ஆட்டம் சமனில் முடிந்தது. உலகக்  கோப்பை வரலாற்றில் இந்த முறை தான் சூப்பர் ஓவர் வரைக்கும் இறுதி ஆட்டத்தின் முடிவு சென்றது. அதிலும் சமநிலை என்பது மற்றுமொரு வரலாற்று சாதனையாகும். ரன் குவிக்கும் போது 92 பந்துகளில் நியூஸிலாந்து  வீரர்கள் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் நிதானமாக ஒன்றும் இரண்டுமாக எடுத்த ரன்களால் கோப்பையை கொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நம்பிக்கை ஒளி...

கிரிக்கெட் விளையாட்டில் ஒவ்வொரு வீரரின் கனவும் உலகக் கோப்பையை நோக்கியே இருக்கும். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு முதுகெலும்பாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ், தான் பிறந்த சொந்த மண்ணான நியூஸிலாந்துக்கு வில்லனாக மாறினார். கடந்த உலகக்கோப்பையின் அரையிறுதியில் நியூஸிலாந்து வெற்றி பெற செய்த எலியாட் தென் ஆப்பிரிக்க அணிக்கு வில்லனாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.
 
கூல் கேப்டன்...

இறுதி ஆட்டத்தில் கடைசி வரைக்கும் வீழ்ந்துவிடாமல் போரா டிய நியூஸிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது. மேலும் இந்திய அணியின் அனுபவ வீரர் தோனியைப் போல பதற்றமில்லாமல் இங்கிலாந்து அணியை திணறவிட்ட வில்லியம்சனுக்கும் கேப்டன் கூல் பதவி கிடைத்துள்ளது.