tamilnadu

img

உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு, ஆஸ்திரேலியா அணி  தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 13 ‘லீக்‘ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில், இங்கிலாந்து அணியை 64 ரன்களில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக்கோப்பை தொடரின், 9 போட்டிகளில் 7 போட்டிகள் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 6 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.