tamilnadu

img

இன்னும் 7 நாட்கள் உலகக் கோப்பை திருவிழா இங்கிலாந்து 2019

2 முறை உலகக்கோப்பை வென்ற அணியான விண்டீஸ் (மேற்கு இந்தியத் தீவுகள்) அணியைப் பற்றி இன்று பார்க்கலாம்.கேப்டன்: ஜேசன் ஹோல்டர் பேட்ஸ்மேன்கள் : கிறிஸ் கெயில், எவின் லெவிஸ், டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மேயர்ஆல்ரவுண்டர்கள்: ஆஷ்லே நர்ஸ், பாபியன் ஆலன், ஆந்த்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிரத்வெய்ட், ஜேசன் ஹோல்டர் விக்கெட் கீப்பர்கள்: நிகோலஸ் பூரான், சாய் ஹோப்,      பந்துவீச்சாளர்கள் : கேமர் ரோச், ஓஸ்னேதாமஸ், ஷனான் காப்ரியல், ஷெல்டன் காட்ரல்

அணியின் சிறப்பு: 

பேட்டிங்கில் படுசுட்டியாக இருப்பார்கள்.ஆடுகளம் மிதமானதாக இருந்தால் ஸ்விங் செய்து சுருட்டி விடுவார்கள்.காலத்திற்கு ஏற்பஅதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைவசப்படுத்துவார்கள்.பவுண்டரிகளை அதிகம்விரும்பமாட்டார்கள்.சிக்ஸர் எப்படி விளாசுவது என்ற நோக்கத்துடன் பந்தின் பிட்ச்மையத்தை லென்ஸ் போட்டு கவனிப்பார்கள்.உடும்பு பிடி போல பந்தை கேட்ச் செய்வார்கள்.வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் ஒரேமனநிலையுடன் பெவிலியன் திரும்புவார்கள்.முக்கிய ஆட்டங்களில் வென்றால் நடனம் ஆடுவார்கள்.    

இங்கிலாந்து மண்ணில்

இங்கிலாந்து ஆடுகளங்கள் விண்டீஸ் அணிக்குப் பிடிக்காது.இதற்குக் காரணம் தங்கள் உயரத்திற்கு ஏற்ப பந்து எகிறாமல் தரை தட்டும் அளவிற்கு ஸ்விங் ஆவதால் ரன் குவிக்கமுடியாமல் திணறுவார்கள்.ஆனால் பந்து நன்றாக வீசுவார்கள்.    

வீரர்கள் தேர்வு எப்படி?   

கிறிஸ் கெயில், டேரன் பிராவோ, ஆந்த்ரேரஸ்ஸல், கார்லோஸ் பிரத்வெய்ட், கேமர் ரோச்,ஷனான் காப்ரியல் ஆகியோர் மட்டுமே அதிகசர்வதேச அனுபவம் உடையவர்கள்.இதில் டேரன் பிராவோ,கேமர் ரோச், ஷனான் காப்ரியல்  ஆகியோர் டெஸ்ட் அணிக்குக் கைதேர்ந்தவர்கள்.இவர்களை அணியில் சேர்த்திருப்பது வியப்பாக உள்ளது.

பலம்       

பேட்டிங், பந்துவீச்சு துறையை விட ஆல்ரவுண்டர் துறை சற்று பலமாக உள்ளது.இளம் வீரர்கள் அதிகம் இருப்பதால் தங்களது துடிப்பான ஆட்டத்தின்  மூலம் இக்கட்டானசூழ்நிலையில் உதவுவார்கள்.கேப்டன் ஜேசன்ஹோல்டரின் பொறுமையான கேப்டன்ஷிப் அணிக்குப் பக்க பலமாக இருக்கும்.இங்கிலாந்து ஆடுகளங்கள் சிறிய அளவில் இருப்பதால் சிக்ஸர் வேட்டையுடன் எதிரணியைபிழிந்தெடுப்பார்கள்.அசுர பார்மில் உள்ளஆந்த்ரே ரஸ்ஸலின் முரட்டுத் தனமான ஆட்டம் எதிரணிக்கு சிக்கலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

பலவீனம்

மூன்று பிரிவுகளிலும் விண்டீஸ் அணி பலமிழந்த வகையில் கத்துக்குட்டியைப் போன்றுஉள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு நட்சத்திர வீரர்கள் எவரும் இல்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் நன்றாகப் பந்துவீசும் சுனில் நரைனை அணியில் சேர்க்கவில்லை. அவசரக் காலத்தில் உதவும் அதிரடிவீரர் பொல்லார்டை அணியில் தேர்வு செய்யாதது புரியாத புதிராக உள்ளது. ஒருநாள் தொடருக்கான நிதான மனநிலையுடன் விளையாடும் வீரர்கள் எவரும் இல்லை.

உலகக்கோப்பையில் சாதிக்குமா? 

உலகக்கோப்பைக்கான விண்டீஸ் அணியை உற்று நோக்கும் போது சிறிய அணிகளானவங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிக்கு இணையாக உள்ளது. பாகிஸ்தான்,இலங்கை, நியூஸிலாந்து ஆகிய அணிகளைச் சமாளித்தால் அரையிறுதி வாய்ப்பு பற்றிச் சிந்திக்கலாம். கிறிஸ் கெயில், ஆந்த்ரே ரஸ்ஸல்,கார்லோஸ் பிரத்வெய்ட் ஆகியோர் அதிரடிமூலம் மாயாஜாலம் நிகழ்த்தினால் கோப்பையைதொட்டுப்பார்க்கலாம்.ஆனால் எனக்குத் தான்கோப்பை என இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முட்டிமோதிக் கொள்ளுவதால் கோப்பை பற்றி சிந்திப்பதே சிரமம் தான்.

நாளை மைதானங்கள் பற்றிய கண்ணோட்டம்...