tamilnadu

img

உத்திரபிரதேசத்தில் பயிற்சி விமான விபத்து : விமானி உயிரிழப்பு 

உத்திரபிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் மத்திய அரசின்  இந்திரா காந்தி ராஜீவ் கான் அகாடமி என்ற பெயரில் விமான பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பயிற்சி விமானி  டிபி20  ரக சிறிய விமானம் ஒன்றில் இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஆசம்கர் மாவட்ட வான்பரப்பில் சென்றுகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது