tamilnadu

img

திண்டிவனம் திமுக எம்எல்ஏ வெற்றி செல்லும்: நீதிமன்றம்

சென்னை,மார்ச் 10- திண்டிவனம் தொகுதி திமுக பெண் எம்.எல்.ஏ சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திண்டிவனம் தொகுதி திமுக வேட்பாளர் சீதாபதி சொக்கலிங்கம் 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாயன்று(மார்ச் 10) விசாரணைக்கு வந்தபோது, திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும், அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.