tamilnadu

img

நிர்பயா குற்றவாளியின் முயற்சி தோல்வி!

புதுதில்லி, மார்ச் 16- சீராய்வு மனு, கருணை மனு தாக்கல் செய்தபோது  அதில் இருக்கும் அம்சங்களை தனக்கு தெரிவிக்க வில்லை என்று நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ்  சிங் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. 4 பேர் வரும் 20ம் தேதி தூக்கிலிடப்பட உள்ளனர்.