tamilnadu

img

ஒவ்வொரு தொகுதியிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனையிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒவ்வொரு தொகுதியிலும் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் எண்ணிக்கையை 1லிருந்து 5ஆக உயர்த்த தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு ஒன்று என்ற விதத்தில் மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதத்தை தணிக்கை சோதனை செய்யும் நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டில் ஐயம் இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது.


அதில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் காகித சோதனை என்பது 5 ஆக உயர்த்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிப்பு என்பது மக்களிடம் எழும் ஐயத்தினை தெளிவுறச் செய்யவே என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவிகித மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனையிட 6 நாட்கள் அதிகம் எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும், மொத்தம் 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் 6 நாட்கள் அதிகம் எடுத்தாலும் பரவாயில்லை. அந்த நாட்களையும் தேர்தல் நடைமுறை நாட்களுக்குள் ஒருங்கிணைக்க இயலும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.


;