tamilnadu

img

நாகர்கோவில் பாலியல் வன்கொடுமை:

சிபிஐ விசாரணை கோரி முதல்வருக்கு சிபிஎம் மனு

நாகர்கோவில், ஏப்.29- கன்னியாகுமரி கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காசி என்ற நப ரின் மீதான வழக்கு விசாரணையை மத் திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றி பாதிக் கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வலி யுறுத்தி தமிழக முதல்வர், தமிழக காவல் துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி மனு அனுப்பியுள்ளார். 

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது சிறு மியர் மற்றும் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது மட்டுமல் லாமல், வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டவர்களின் தொடர்பு எண்களை தனது நண்பர்களுக்கும் கொடுத்து அவர்களும் பல்வேறு வகையான பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேற்கண்ட குற்றவாளி சுஜி என்ற காசியிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல் மற்றும் கேமராக்களில் பதிவுசெய் யப்பட்டிருந்த பாலியல் வன்கொடுமை சம்பந்தமான புகைப்படங்களை காவல் துறை ஆய்வு செய்த போது குமரி மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமல் லாது தமிழகத்தின் பிற மாவட்டத்தை சார்ந்தவர்களும், பெங்களூரு மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் உள் ளதாக தெரிய வருகிறது. இந்த வழக்கில் உள்ள குற்றவாளிகள் தப்பிக்க அதிகார பலம் மிக்கவர்கள் முயற்சி செய்து வரு வதாக தெரிகிறது. 

பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பெண் கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட அளவிலான காவல் நிலையத்தில் இந்த வழக்கை விசாரித்தால் வழக்கின் தீவிரத் தன்மை குறைந்து நீர்த்து போய்விடும். இந்த வழக்கில் சங்கிலி தொடர் போல் உள்ள குற்றவாளிகள் அனைவரும் தப் பித்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கின் தீவிர தன்மை மாறாமலும், குற்றவாளிகளுக்கு தண் டனை கிடைக்க செய்ய வேண்டியும், இந்த வழக்கினை மத்திய புலனாய்வு பிரிவுக்கு மாற்றிட பரிந்துரை செய்து நீதி கிடைத்திட வேண்டுகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

;