tamilnadu

img

அபிமன்யூ கொலையில் முக்கிய குற்றவாளி சரண்

கொச்சி, ஜுன் 18- கேரளத்தில் எஸ்எப்ஐ தலைவரும் மகா ராஜாஸ் கல்லூரி மாணவருமான அபிமன்யூவை கொடூரமாக குத்தி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஹேல், சுமார் 2ஆண்டு கள் தலைமறைவுக்குப்பின் வியாழனன்று எர்ணா குளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். 

மகாராஜாஸ் கல்லூரி மாணவரும் கேம்பஸ் பிரண்ட் ஊழியருமான முகம்மது இந்த வழக்கில் முதல் குற்றவாளி. 2018 ஜுலை 2 ஆம் தேதி இரவு அபிமன்யூவை (20) கேம்பஸ் பிரண்ட் அமைப்பினர் குத்தி கொலை செய்தனர். கல்லூரியின் எஸ்எப்ஐ ஊழியர்களான அர்ஜுன், வினீத் ஆகியோருக்கு கத்திக்குத்தில் படுகாயம் ஏற்பட்டது. தடியால் தாக்கப்பட்ட ராகுலும் காயமடைந்தார்.  குற்றவாளிகள் மீது கொலை, கொலை செய்ய முயற்சி, கொடிய ஆயுதங்களால் காயம்  ஏற்படுத்தல் உட்பட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.