tamilnadu

img

பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை மே 19 வரை வெளியிடக் கூடாது : தேர்தல் ஆணையம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை படமான பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை மே 19 ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் , தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் கடந்த 10 ஆம் தேதி தடை விதித்தது.இதனை எதிர்த்து படத்தயாரிப்பாளர்கள் உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , படத்தை பார்த்து விட்டு அது தொடர்பாக ஏப்.,22 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து படத்தை பார்த்த தேர்தல் அதிகாரிகள், அது தொடர்பாக சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தனர். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, இப்படத்தில் மோடியின் வாழ்க்கை கதையை விட அதிகமாக மோடியின் புகழ் பாடப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், தேர்தல் சமயத்தில் இப்படத்தை வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறுவதாகும். குறிப்பிட்ட கட்சியை முன்னிலைப்படுவதாக இப்படம் உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடக் கூடாது. கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நாளான மே 19 வரை இப்படத்தை வெளியிட அனுமதி அளிக்கக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரும் வெள்ளிகிழமை முடிவு எடுக்கிறது


;