tamilnadu

img

பாஸ்டேக் கட்டணம்: நீதிமன்றம் அறிவுரை

 சென்னை, டிச. 21- பாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறையில் உள்ள  தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட வேண்டும்  என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்  னையைச் சேர்ந்த வழக்கறி ஞர் கபிலன் மனோகரன் என்  பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். தலைமை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிர சாத் அமர்வில் வழக்கு விசா ரணைக்கு வந்தது.  அப்போது, பாஸ்டேக் அட்டை பெற்று வீட்டில்  நிறுத்தப்பட்ட வாகனத் துக்குச் சுங்க கட்டணம் வசூ லிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறை யில் உள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த  நீதிபதிகள், இதுதொடர்பாக உரிய விளக்கங்களுடன் கூடு தல் மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவு றுத்தி, விசாரணையை ஒத்தி  வைத்தனர்.