பிரெய்ன் லாக்வுட், ஜெனெ லாக்வுட் பெருமிதம்
இங்கிலாந்தின் நார்விச் பகுதியை சார்ந்த தம்பதியர் பிரெய்ன் லாக்வுட் மற்றும் ஜெனே லாக்வுட் தங்களது கேரள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மார்ச் மாதம் 15 ம் நாள் ஊருக்கு செல்ல இருந்த கொச்சி - துபாய் விமானத்தில் பயணம் செய்ய இருந்த போது கேரள சுகாதார அதிகாரிகள் அவர்களை அணுகி பிரெய்னுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தனர். பல வருடங்களாக மருத்துவமனையே போகாத பிரெய்னுக்கு முதலில் இதை ஏற்றுக்கொள்வதே சிரமமாக இருந்தது. அவர்களது விரிவான விளக்கமும் சோதனை முடிவும் அவரை மாற்றியது. உடனடியான சோதனைக்குப்பிறகு அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவிக்கு தொற்று ஏற்படாத காரணத்தால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டார். இதற்கு மருந்து இல்லாத நிலையில் மருத்துவர்கள் அவரது நோய் தீவிரத்தை உணர்ந்து மோசமான முடிவு வராமலிருக்க உடனடியாக சில முடிவுகள் எடுத்தனர்.
மனித நோய் எதிர்ப்பு குறைபாடு தொற்றுக்கான(ஹெச்.ஐ.வி) சிகிச்சை மருந்தை செலுத்துவது என்ற - கரணம் தப்பினால் மரணம் என்ற முடிவை எடுத்து, அதை அவர்களிடமே தெரிவித்து கொடுத்தனர். அதுவே அவர் உயிர் பிழைக்க வகை செய்தது.
தலைமை மருத்துவர் ஜேக்கப், மருத்துவர் பதாகுதீன் ஆகிய இருவரும் பிரெய்ன் மற்றும் அவரது மனைவியிடம் மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தி தொடர்ந்து அவர்களிடம் உடனுக்குடன் நிலைமைகளை தெரிவித்து அவர்களது தனிமைக் காலமான பதினேழு நாட்கள் முடிந்து அவர் குணமாகி தனது மனைவியை சந்தித்தது உணர்ச்சிப் பூர்வமானதாகும். இருவரும் மீண்டும் இங்கிலாந்துக்கு தங்களது வயதான பெற்றோரை பார்க்கச் செல்கிற நேரத்தில் ‘கேரளா அளிக்கிறது’ என்ற கேரள சுகாதார அமைச்சகத்தின் சிறப்பிதழுக்கு அளித்த நேர்காணல் இது:
சந்திப்பு: பாலகோபால்
இப்போது என்ன உணர்கிறீர்கள்?
இப்போது நான் நல்ல சக்தி பெற்றவனாக உணர்கிறேன். ஆனாலும் எனது சொந்த மருத்து வரை சென்று பார்க்க விரும்புகிறேன். அடுத்த வாரம் இங்கிலாந்து அரசு ஏற்பாடு செய்ய உள்ள ஒரு விமானத்தில் நானும் மனைவியும் செல்ல முடியும் என நம்புகிறேன். இங்கு ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில் நாங்கள் பாதுகாப்பை உணர்ந்தாலும் எங்களது வயதான பெற்றோருக்கு உதவுவதற்கு செல்ல வேண்டும்.
இந்த சுகவீனம் தங்களை எப்படி தாக்கியது என் பகிரமுடியுமா? அதாவது, முதல் அறிகுறி என்ன? மருத்துவம் மேற்கொண்ட காலம் முழுவதும் தாங்கள் நினைவோடு இருந்தீர்களா?
துவக்கத்தில் எனக்கு காய்ச்சலும், இருமலும் இருந்தது. இந்த அறிகுறிகளை உணர்ந்து நான் மூணாறில் இருந்த டாட்டா மருத்துவமனை சென்றேன். அங்கு அவர்கள் எனக்கு நிமோ னியா இருப்பதாக சொன்னார்கள். ஆகவே கொரோனா சோதனை செய்ய சொன்னார்கள். மருத்துவக் கல்லூரியில் என் நிலை மிகவும் மோசமாகியது. ஆனால் நினைவிருந்தது. மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.
ஆக்சிஜன் செலுத்துகிற கருவி பொருந்தப் பட்டு ஆக்சிஜன் போதுமான அளவு கொடுக்கப்பட்டது. தளர்வு என்று சொன்னால், என்னை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்கிறபோது எனது பக்கத்து அறையிலிருந்த எனது மனைவியை பிரிய வேண்டியிருந்தது. அவரது குறைந்த அளவு உதவிகள் கூட இல்லாமலா யிற்று. அலைபேசியில் மட்டும் தான் பேச முடிந்தது. எனது முககவசத்தை உணவு உண்ணும் போதும், கழிவறைக்கு செல்லும் போதும் கழற்றுவது தான், அதைக் கூட நான் பிறகு உணர்ந்தேன், அதை எப்போதும் அணிவதுதான் என்னை நோயிலிருந்து குணப்படுத்தும் என்று. உயர்வு என்பது மனோநிலையை நல்ல முறையில் வைத்திருக்க உதவிய மருத்து வர்கள் மற்றும் செவிலியர்களின் ஊக்கமும், நகைச்சுவைகளும் தான்.
கேரளம் உங்களுக்கு எப்படி?
நாங்கள் பழகிய கேரளர்கள் அற்புதமானவர்கள். கொச்சி நகரம், எர்ணாகுளத்தில் இப்படி ஒரு அரசு மருத்துவ கல்லூரியையும் அதில் பணியாற்றுகிற தொழில் முறை பணி யாளர்களையும் குறித்து பெருமைப் படவேண்டும். மேலும் கேரள சுற்றுலாவும், கொச்சி காவல் துறையும் எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். எங்கள் நலனை அவர்கள் இதயத்தில் வைத்து மேற்கொண்டனர். தனிமைப்படுத்தப்பட்ட போது உதவிய பணியா ளர்கள் அதி அற்புதமானவர்கள்.
இங்கிலாந்து சென்ற பிறகு கேரளாவை உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வீர்களா?
ஆம். உறுதியாக, கடவுளின் சொந்த நாட்டை இளைப்பாறுவதற்கான இடமாக பரிந்து ரைப்போம், இங்குள்ள இயற்கை காட்சிகளுக்கும் அன்பான மக்களுக்காகவும்.
கொரோனாவிற்கு முன்பும் பின்பும் நீங்கள் நினைவிற்கொள்ள உங்களுக்கு உற்சாகமான நிகழ்ச்சிகள் கேரளாவில் இருந்த போது உள்ளனவா?
சுகவீனத்திற்கு முன் நாங்கள் கலந்து கொண்ட கோவில் விழா கவரும்படி இருந்தது. சிகிச்சையின் போது இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த மருத்துவர்களும், செவிலி யர்களும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது காட்டிய பரிவும் பாசமும், நகைச்சுவை யும் எனது மனோ தைரியத்தை உயர்த்தியது.
கேரளாவைச் சேர்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் இங்கிலந்தில் தேசிய சுகாதார சேவை (என்.ஹெச்.எஸ்) மூலம் மருத்துவமனைகளில் வேலை செய்வது குறித்து தெரிந்திருக்கிறீர்களா? அப்படிப்பட்டவர்களை எப்போதாவது உங்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சந்தித்தது குறித்து நினைவு இருக்கிறதா?
எனக்கு அப்படி எங்களது உள்ளூர் மருத்துவமனையில் கேரளத்தவர்கள் வேலை பார்ப்பது என்பது, நாங்கள் பல வருடங்களாக அங்கு மருத்துவ மனைகளுக்கு செல்லாத தால் தெரியவில்லை. இப்போது தான் தெரிகிறது, அண்மையில் கொரொனா தொற்று மைய மாக எங்களது பகுதியும், சுற்றுப்பகுதிகளும் உள்ளன. அங்குள்ளவர்கள் நலமுடன் பாது காப்பாக இருக்க விரும்புகிறேன்.
இங்கிலாந்து செய்திகளை தெரிந்து வருகிறீர்கள் என நம்புகிறேன். இப்படி நீங்கள் அங்குவைத்து சுகவீனமுற்றிருந்தால் என்.ஹெச்.எஸ் உங்களுக்கு இந்த சேவையை செய்திருக்கும் அல்லவா?
அங்கு என்ன விதமான சிகிச்சை செய்யப்படுகிறது என்பது தெரியாது. அனால் சந்தே கத்திடமின்றி சொல்லமுடியும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்தை நான் கேரளாவில் பெற்றேன். மருத்துவர் பதாவுதீன், மருத்துவர் ஜேக்கப் குழுவானது அவர்களுடைய அற்புத மான சேவைகளுக்கு கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று.
தமிழில்: அகமது உசேன்