tamilnadu

img

“உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தினோம்”

 ஈரான் ராணுவம் ஒப்புதல்

டெஹ்ரான், ஜன.11- உக்ரைன் பயணிகள் விமானத்தை ‘தவறுதலாக’ சுட்டு வீழ்த்திவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இத் தகவலை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை காலை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரா னின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்த மான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, ‘மனித தவறு களின்’ காரணமாக அதை சுட்டு வீழ்த்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமான வர்கள் பொறுப்பாக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பி டப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைனின் தலைநகரான கீவ் நக ரத்தை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமி டங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கி யது, இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர். ஈரான் நடத்திய ஏவுகணை தாக்கு தலில்தான் இந்த விமானம் சிக்கிய தாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. ஆயினும் அதைத் தொடர்ந்து மறுத்து வந்த ஈரான் தற்போது முதல் முறை யாக ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவம் தொடர் பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.  இந்தநிலையில், கடந்த வியா ழக்கிழமை அன்று விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலுள்ள குப்பை கள் இயந்திரத்தை கொண்டு அகற் றப்படுவது போன்ற புகைப்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியாயின. இதன் மூலமாக, விமான விபத்து குறித்த முக்கிய ஆதாரங்கள் அப்பு றப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது. 

உக்ரைன் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமா னம் ஜனவரி 8ஆம் தேதி ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனீ சர்வதேச விமான நிலை யத்தில் இருந்து கிளம்பிய சற்று நேரத்தி லேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமான ஊழியர்கள், பய ணிகள் என 176 பெரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமா னம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந் தது. உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரா னைச் சேர்ந்தவர்கள், 63 பேர் கனடா வைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 பேர்உக்ரைன் நாட்டவர்கள் ஆவர்.பத்து பேர் சுவீ டனைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் பிரிட்டனைச் சேர்ந்த வர்கள், மூன்று பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

;