tamilnadu

img

ஊரடங்கு உத்தரவால் வறுமைக்குள் தள்ளப்படும் 40 கோடி முறைசாரா தொழிலாளர்கள்

ஐ.நா. சபை எச்சரிக்கை

ஐ.நா.சபை, ஏப்.8- உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளனர் என்றும் உலகளவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 19.5 கோடி முழுநேர வேலைகள் அல்லது வேலைநேரத்தின் 6.7 சதவீதம் அழிக்கப்படும் என்றும் ஐ.நா. வின் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ)வெளி யிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று நோயால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான உலகளாவிய நெருக்கடி. இந்தியா, நைஜீ ரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், ஊரடங்கு மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முறை சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இந்தியாவில், முறைசாரா பொருளாதார துறையில் பணிபுரி யும் 90 சதவீத மக்களின் பங்கைக் கொண்டு, முறைசாரா பொருளாதாரத்தில் சுமார் 40 கோடி தொழிலாளர்கள் நெருக்கடியின் போது வறுமைக்குள் விழும் அபாயத்தில் உள்ளனர். அவர்களில் பலர் கிராமப்புறங்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், 

உலகளவில், 200 கோடி மக்கள் முறைசாரா துறையில் (பெரும்பாலும் வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளா தார நாடுகளில்) பணிபுரிகின்றனர், அவர்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர். கொரோனா நெருக்கடி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களை பாதித்துள்ளது என்று ஐ.எல்.ஓ தெரிவித்துள்ளது.