tamilnadu

img

டிரம்ப்பின் முயற்சி சட்டவிரோதமானது

அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வாஷிங்டன், ஜூன் 20- அமெரிக்காவில் சிறுவயதில் ஆவ ணங்கள் இன்றி குடியேறிய இளம் குடியேறி களை நாடு கடத்துவதில் இருந்து பாது காக்கும் குடியேற்ற கொள்கையை முடி வுக்கு கொண்டுவர ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது என்றுகூறி அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டிரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.

சிறுவயதில் அமெரிக்காவிற்குள் குடி யேறியவர்களை பாதுகாக்கும் (டாகா) திட்டத்தை நீக்குவது சட்டவிரோதமானது என அமெரிக்க கீழமை நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. தற்போது உச்சநீதி மன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது. சுமார் 650,000 இளைஞர்கள், தங்கள் சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்தனர். இவர்களை பாதுகாக்கும் “டிரீமர்ஸ்” திட்டமும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவில் குடியேறியவர்களை பாது காத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதி களை வழங்கும் திட்டத்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 2017ஆம் ஆண்டு அமல்படுத்தினார்.

தன்னிச்சையாக செயல்பட முடியாது

ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ப தற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் அமெரிக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. எனவே சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அர சாங்கம் தன்னிச்சையாக, செயல்பட முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆயினும் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் நீதிமன்றத்தின் இந்த முடி விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.