tamilnadu

img

எல்லையில் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காண்போம்!

இந்தியா - சீனா கூட்டாக அறிவிப்பு

புதுதில்லி, ஜூன் 6- இந்தியா - சீனா எல்லையில் எழுந் துள்ள பிரச்சனைகள் குறித்து இரு நாடு களும் பேச்சுவார்த்தை நடத்தின; முரண் பாடுகளை அமைதியான முறையில் தீர்த்து கொள்வது என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன என்றும், தொடர்ச்சியாக இரு தரப்புக்கிடையே பரஸ்பரம் நம்பிக்கையை வலுப்படுத்து வதன் மூலம் அவ்வப்பொழுது எழும் முரண்பாடுகளை முறையாக களைந்து மேலாண்மை செய்து கொள்வது என முடிவெடுத்துள்ளன என்றும் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா - சீனா இடையே இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தி லான பேச்சுவார்த்தை வெள்ளியன்று நடைபெற்றது. மே மாதம் இறுதியில் இந்தியா - சீனா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் எழுந்த பதற்றச் சூழல் தொடர்பாக இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இதன்பின்னர் வெளியிடப்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில், “இருதரப்பும் தங்களுக்கு இடையே எழும் வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் அணுகுவது என்றும், இரு தரப்பும் பரஸ்பரம் மற்ற நாடுகளின் உணர்வுகள், கவலைகள், பதற் றத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவற்றை மதித்து செயல்படுவது என்றும், இத்தகைய வேறுபாடுகள், பிரச்சனைகளாக மாறு வதை அனுமதிக்காமல் இருப்பது என் றும் ஒப்புக் கொண்டதாக” கூறப்பட் டுள்ளது.

மேலும், “இப்பேச்சுவார்த்தையில் இரு தரப்பின் உறவில் தற்போதைய நிலைமை குறித்தும் ஆலோசிக்கப்பட் டது” என்றும், தற்போது எழுந்துள்ள நிகழ்வு போக்குகளை ஆய்வு செய்த தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “தற்போதைய உலகச் சூழலில் இந்தியா மற்றும் சீனா இடை யிலான உறவுகள் அமைதியானவை யாகவும், நிலைத் தன்மை வாய்ந்த தாகவும், இருதரப்புக்கிடையே சம நிலையை பேணுவதாகவும் இருப்பது தான் இரு நாடுகளின் நலனுக்கும் ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று இரு நாட்டு தலைவர்களிடையே பொது கருத்து எட்டப்பட்டிருக்கிறது என்பதை இப்பேச்சுவார்த்தை உறுதி செய்தது” எனவும் இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காணொலி மூலமாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கிழக்காசிய விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா, சீன வெளியுறவு அமைச்ச கத்தின் ஆசிய விவகாரத் துறை இயக்கு நர் வூ ஜிங்காவோ ஆகியோர் பங்கேற்றனர்.

ஒருவருக்கொருவர் ‘அச்சுறுத்தல்’ அல்ல!

இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சீன வெளியுறவு அமைச்சகம் வெளி யிட்ட அறிக்கையில், இதே கருத்தை எதி ரொலித்துள்ளது. “இந்தியாவும், சீனா வும் ஒன்றுக்கொன்று ஒரு அச்சுறுத்தல் என்ற நிலைமை உருவாக்கப்படக் கூடாது என்ற இருநாட்டு தலைவர்களின் பொதுக் கருத்தினை உறுதியான முறையில் அமல்படுத்துவது என பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள் ளப்பட்டது; அவ்வப்போது எழும் வேறு பாடுகள் இருதரப்பு தாவாக்களாக மாறா மல் பார்த்து கொள்வது அவசியம்; பரஸ்பரம் நம்பிக்கை, வேறுபாடுகள் எழும் போது அவற்றை முறையாக களைந்து மேலாண்மை செய்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது” என்று சீன வெளியுறவு அமைச்சக அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கோவிட் 19 வைரஸ் பரவலால் எழுந்துள்ள சவால் கள் குறித்தும், அவற்றை எதிர்கொள் வதற்கு இரு நாடுகளிடையே ஒத்து ழைப்பை பலப்படுத்துவது தொடர்பாக வும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன.

70 ஆண்டு உறவு

மேலும், இந்தியா - சீனா இடையி லான ராஜீய உறவுகள் துவங்கி 70 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் நிகழ்வுகளை திட்டமிட்ட முறையில் துவக்குவது என்றும் இந்த உறவை எதிர்காலத்தில் தொடர்ந்து சரி யான திசைவழியில் கொண்டு செல்லும் விதத்தில் 70 ஆம் ஆண்டு விழா நிகழ்வு கள் அமைய வேண்டும் என இருநாடு களும் ஒப்புக் கொண்டதாகவும் சீன வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கோவிட் 19 வைரஸ் தொற்று உல களாவிய முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் வகையில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சி களை இருநாடுகளும் எதிர்க்கின்றன; உலக சுகாதார அமைப்பிற்கு இருநாடு களும் தங்களது ஆதரவை தெரி வித்துக் கொள்கின்றன” என்றும் சீன வெளியுறவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த இரண்டு வரிகள் மட்டும் இந்திய வெளி யுறவு அமைச்சக அறிக்கையில் இடம் பெறவில்லை.

மேலும், “இரு நாடுகளும் பன்முகத் தன்மையை வளர்த்தெடுப்பது, பாது காப்பது, ஒற்றை உலக ஆதிக்க முயற்சி களை எதிர்ப்பது, குறிப்பிட்டநாடுகள் தங்களது நலன்களை மட்டும் பாது காத்துக் கொள்வது மற்றும் மேலா திக்கம் செய்வது ஆகிய நடவடிக்கை களை கூட்டாக எதிர்ப்பது, சர்வதேச அளவில் நீதி மற்றும் நேர்மை ஆகிய வற்றையும் வளர்முக நாடுகளின் பொது வான நலன்களை பாதுகாப்பது என்பதி லும் கூட்டாக செயல்படுவது என்றும் முடிவு செய்தன” என்றும் சீன வெளியு றவு அமைச்சக அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

 

;