tamilnadu

மது விற்ற இருவர் கைது

ஈரோடு, மார்ச் 16- ஈரோடு மடத்துப்பா ளையத்தில் பெருந்துறை போலீசார் ரோந்து பணியில்  ஈடுபட்டபோது, சட்டவிரோ தமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல்  கிடைத்தது. இதனைய டுத்து அப்பகுதிக்கு சென்ற  போலீசார் மது விற்பனை யில் ஈடுபட்டிருந்த சுந்தர் ராஜ்(57) என்பவரை கைது  செய்தனர். இதேபோல் புளியம்பட்டி பனையம்பள் ளியைச் சேர்ந்த மூர்த்து(40) என்பவரையும் கைது செய்த போலீசார் அவர்களிட மிருந்து ஏராளமான மது  பாட்டில்களையும் பறிமு தல் செய்தனர்.