tamilnadu

img

தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தேர்தல் ஒத்திவைப்பு

கோபி, ஜன. 30- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 10 ஒன் றியக்குழு உறுப்பினர் பதவிகளில் 7 திமுக கூட்டணியும், 3 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தலைவரை தேர்தெடுக்கும் தேர்தல் கடந்த ஜன.11 ஆம் தேதி நடைபெற் றது. இந்நிலையில் தேர்தலில் அதி முகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 3 பேரும் வாக்களித்த நிலையில் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்களை வாக்களிக்க விடா மல் அதிமுகவைச் சேர்ந்த ஒன்றாவது வார்டு உறுப்பினர் நடராஜ் என்பவர் வாக்கு பெட்டியை தூக்கி சென்றார். இதனைக் கண்டித்து திமுகவினர் அலுவலக வளாகத்தினுள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல்  நடத்தும் அலுவலர் இந்திராதேவி தேர்தலை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.  இதனைத்தொடர்ந்து வியாழ னன்று தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தூக்கநாயக்கன்பாளை யம் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்த ஆயத்தமாகியிருந்தனர். இந்நிலை யில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று ஒன்றியக்குழு உறுப்பினர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப் பதிவு  மையத்திற்கு வந்துவிட்டனர். ஆனால், திமுகவை சேர்ந்த 7 ஒன்றி யக்குழு உறுப்பினர்களும் வாக்கு  பதிவு மையத்திற்கு வராத காரணத் தால் மீண்டும் மறு தேதி குறிப்பிடப் படாமல் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலை ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பொன் னம்பலநாதன் அறிவித்துள்ளார்.  இது குறித்து திமுக கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் கூறியதாவது, தேர்தல் நடத்தும் அலுவலர் மீது நம்பிக்கை இல்லை. ஆகவே இத்தேர்தலானது ஜனநாய முறைப்படி நடைபெறாது என்ற காரணத்தாலும் திமுகவின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்த லில் பங்கேற்கவில்லை என தெரி வித்தார்.

;