tamilnadu

img

தியாகிகள் நினைவு ஜோதி பயணம் ஈரோட்டில் உற்சாகமான வரவேற்பு

ஈரோடு,ஜன.20- சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு செல்லும் சின்னியம் பாளையம் தியாகிகள் நினைவு ஜோதிக்கு ஈரோட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.    சென்னையில் வரும் 23 ஆம் தேதி  முதல் 27 ஆம் தேதி வரை சிஐடியு  தொழிற்சங்கத்தின் 16வது அகில  இந்திய மாநாடு நடைபெற வுள்ளது.இம்மாநாட்டையொட்டி  கோவையிலிருந்து புறப்பட்ட  சின்னியம்பாளையம் தியாகி களின் நினைவு ஜோதி திங்க ளன்று சத்தியமங்கலம்,அரசூர்,  காசிபாளையம், கோபிசெட்டி பாளையம் கவுந்தப்பாடி,பவானி வந்தது. இதில் சத்தியிலிருந்து ஏ.எம்.காதர் மற்றும் எஸ்.நாராயணசாமி நினைவு ஜோதி பயணம் சங்கமித்தது. இதற்கு சிஐடியு பொருளாளர் மாரப் பன் தலைமை வகித்தார். நினைவு  ஜோதியை சத்தி சிபிஎம் தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார்  எடுத்துக் கொடுக்க,அதனை சிஐ டியு தலைவர் மாரப்பன் பெற்றுக்  கொண்டார். இந்நிகழ்ச்சியில்  சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் க.இரா.திருத்தணிகாசலம்,  உட்பட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து ஈரோடு மாநகரப் பகுதியில், ஸ்டாலின் நினைவு ஜோதி, எஸ்.துரை சாமி நினைவு ஜோதி, வி.நடரா ஜன் நினைவு ஜோதி மற்றும் எம்.என்.சிவசங்கரன் ஆகியோரின் நினைவு ஜோதிகள் பெருந்துறை பேருந்து நிலையம், சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலம் வந்தது. இதற்கு சிஐடியு  தொழிற்சங்கத்தினர் வீர முழக்கங் களை எழுப்பி உற்சாகமான வரவேற்பினை அளித்தனர்.  இதில், ஜோதி பயணக்குழு வின் தலைவர் எஸ். கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு மாவட்ட செய லாளர் ஸ்ரீராம், மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன்,மாவட்டக்குழு உறுப்பி னர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.மேலும் உடு மலை துரையரசன் கலைகு ழுவின் நிகழ்ச்சிகள் நடைபெற் றது

;