tamilnadu

img

கோபியில் தொழிற்பயிற்சி மையத்திற்கு அடிக்கல்

கோபி,பிப்.5- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிக்கான புதிய  கட்டிடம் கட்டும் பணியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏசெங்கோட்டையன் அடிக்கல்  நாட்டி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியத் திற்குட்பட்ட பெரியகொடிவேரியில் வாடகை கட்டிடத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி  வந்தது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டும், ரூ.7 கோடியே 6 லட்சம் மதிப்பீட் டில் கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தமும் போடப்பட் டது.  இதனைத்தொடர்ந்து புதிய கட்டிடம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டிடப்பணியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டி வைத்தார்.  முன்னதாக, கோபிசெட்டிபாளையத்தில் நடை பெற்ற விழாவில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள  மலைப்பகுதிகளான பர்கூர், கடம்பூர் மற்றும் தாளவாடி பகுதிகளில் உள்ள கிராம மக்களின் வசதிக் காக மூன்று ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட 20 நபர்களுக்கு விபத்து நிவாரணமாக ரூ.15 லட்சம் வழங்கினார்.

;