tamilnadu

img

சாலை பாதுகாப்பு வார விழா வாகன ஓட்டிகளுக்கு மலர் கொடுத்து விழிப்புணர்வு

கோபி, ஜன.21-  31 ஆவதுசாலைபாதுகாப்பு வார விழாவையொட்டி போக்கு வரத்து காவல்துறையின் சார்பில்  சாலை விதிகளை மீறிய வாகன  ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் இந்தாண் டும் 20ந்தேதி முதல் சாலை பாது காப்பு வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சாலைவி திகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது. அதன்  ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் போக்கு வரத்துக் காவல்துறையின் சார்பில் பிரதான சிக்னல் அருகில் விதிகளை மீறி வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டி களுக்கு மலர் கொத்துக் கொடுத்து விழிப்புணர்வை ஏற்பத்தினர். மேலும்  சாலைவிதிகள் அடங்கிய துண்டு பிர சுங்களை விநியோகித்து அறிவுரை வழங்கினர்.  இந்நிகழ்வுக்கு கோபி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல்,ஆய்வாளர் சோம சுந்தரம் மற்றும் உதவி ஆய்வா ளர்கள், காவலர்கள் என ஏராளம னோர் கலந்துகொண்டனர்.
ஏற்காடு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், தலைகவசம் அணியாதவர்களுக்கு காவல் துறையினர் ரோஜா பூ வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் ஏற்காடு காவல் ஆய்வாளர் ரகு தலைமையிலான காவ லர்கள், ஏற்காட்டின் பிரதான பகுதி களான, பேருந்து நிலையம், ஒண்டிக் கடை, சேலம் பிராதன சாலை, பகோடா பாயிண்ட் சாலை உள் ளிட்ட பகுதிகளில் தலைகவசம் அணி யாத வாகண ஓட்டிகளிடம் ரோஜா பூக்களை வழங்கி, கட்டாயம் தலை கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்ப டுத்தினர்.

;