tamilnadu

img

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

கோபி, ஜன. 30- கோபிசெட்டிபாளையத்தில், அரசு பள்ளிகளில் பயிலும் 774 மாணவ, மாணவிக ளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியா ழனன்று வழங்கினார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பகுதிக்குட்பட்ட முருகன்புதூர், மொடச்சூர், வெள்ளாளபாளையம், வெள் ளாங்கோயில் உட்பட 9 அரசு பள்ளிகளில் பயிலும் 774 மாணவ, மாணவிகளுக்கு தமி ழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி சிறப் புரையாற்றினார். முன்னதாக, இவ்விழா வில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செய் தியாளர்களை சந்தித்து பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மூன்று நாட்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயி லும் மாணவர்களின் திறம் மேம்பாடு குறித்து அறிந்து கொள்ளவும் இப்பயிற்சி  நடைபெற்று வருகிறது.  மேலும், பள்ளி மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வருகிறார்களா என்பது குறித் தும், மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் பெற்றோர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு  முறை குறுச்செய்தி மூலம் தெரியப்படுத்தி வருகிறது. 8 மற்றும் 9 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு டேப் வழங்கப் படவுள்ளது. டேப்களை வகுப்பறையி லேயே வைத்துக் கொள்ளவும் அதற்கான பாதுகாப்பிற்கும் அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இதன்படி வருகின்ற பிப்ர வரி மாதம் இறுதிக்குள் நான்கு மாணவர் களுக்கு ஒரு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

;