tamilnadu

img

சீரான குடிநீர் வழங்கிடுக - பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கோபி, ஜூலை 6- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலூர் பேரூ ராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் கடந்த ஆறு மாங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்ட வர்கள் கூகலூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட 1 ஆவது வார்டு மனுவக்காடு என்ற பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பேரூ ராட்சி சார்பில் நான்கு அழ்துளை கிணறுகள் அமைத்து, அதில் இரண்டு ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டார் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

இந்நி லையில் கடந்த ஆறு மாங்களாக இரண்டு ஆழ்துளை கிணறு களில் உள்ள மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டதால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும், ஆற்றிலிருந்து கொண்டுவரப்படும் கூட்டுக்குடிநீர் திட்டமும் இப்ப குதிக்கு செயல்படுத்தாததால் ஆழ்துளை கிணறு குடிநீரை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.  இதுதொடர்பாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே ஆழ்துளை கிணறு மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதினை நீக்கியும், தங்கள் பகு திக்கு ஆற்றுநீர் குழாய் அமைத்தும் சீரான குடிநீர் விநியோ கம் செய்யவேண்டும் எனக்கூறி மானுவக்காடு பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூகலூர் பேரூ ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;