அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக் காக, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம், ராம்டெக் ஸ்ரீ ராமர் கோயில் ஆகிய இடங்களிலிருந்து மண், பஞ்சநதி சங்கமிக்கும் இடத்திலிருந்து நீர் சேகரிக்கப்பட்டு, கூரியரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி, அங்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.