tamilnadu

img

ஈரோட்டில் மின் ஊழியர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப். 18- ஈரோட்டில் மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருப வர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்துக. கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் கள உதவியாளர் பணி நியமனம் செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளாகியும் பணி நியமனம் செய்யப் படாத 2,900 ஐடிஐ படித்தவர்களை உடனடியாக பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி நியமன தடை சட்டம் அரசாணை  56  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சார்பில் ஈரோடு மின் பகிர் மான வட்ட அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் எம். லோகு சாமி தலைமை வகித் தார் இதில், சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் ரகுரா மன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், மின் ஊழியர் மத் திய அமைப்பு ஈரோடு மின் திட்ட கிளை துணைத் தலைவர் எம்.ஆர். பெரியசாமி ஆகியோர் உரையாற் றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், சிஐடியு முன்னாள் மாவட்ட உதவித் தலைவர் பி.சுந்தர்ரா ஜன், ஈரோடு மின் திட்ட கிளை பொருளாளர் ஸ்ரீ தேவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக பெருந்துறை கோட்டத் தலைவர் கே.பழனிசாமி நன்றி கூறினார்.

;