tamilnadu

img

குளத்தை அழித்து அடுக்குமாடி குடியிருப்பு குடிசை மாற்று வாரியத்தின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி

கோபி, ஜூலை 18- ஏரி, குளங்களை தூர் வார  அரசு அனுமதியளித்துப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கோபி அருகே இருக்கும் குளத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்துள் ளது, அப்பகுதி விவசாயிகள் மற் றும் பொதுமக்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள  அக்கரை கொடிவேரி ஊராட்சி யில், பவானி ஆற்றின் கரையோ ரங்களில் உள்ள மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யத்தின் மூலம் இப்பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி கொடிவேரி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அரசு நிலத்தில் நடைபெறுகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப் புக்குச் செல்வதற்குப் பாதை  வசதியில்லாததால் கொடிவேரி அணைக்குச் செல்லும் சாலையின் பக்கவாட்டில் இருந்த குளத்தை ஆக்கிரமித்து மண் மேடுகளாக்கி புதிதாகப் பாதை அமைத்துள்ள னர். தமிழகத்தில் தற்போது  ஏற்பட்டுள்ள கடும் வறட்சியி னால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தமிழக அரசு தூர்  வாரி மழை நீர் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அர சுத் துறையே குளத்தை  ஆக்கிர மிப்பு செய்து பாதை அமைத் துள்ளது அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இக்குளத்தில் மழைக் காலங்களில் வரும் தண்ணீர் சேக ரிப்பட்டு வந்தாகவும், தற்போது குளத்தை ஆக்கிரமிப்பு செய்துள் ளதால் இனி தண்ணீர் சேமிக்க வழியில்லை. அதனால் இப்பகுதி யில் நிலத்தடி நீர் மட்டம் வெகு வாகக் குறைய வாய்ப்புள்ளது. குளத்தை ஆக்கிரமித்தது மட்டு மின்றி, அக்கரை கொடிவேரி ஊராட்சியிலிருந்து மழை காலங்களில் வெளியேறும் நீர் வழிப்பாதையையும் அடைத் துப் பாதை ஏற்படுத்தியுள்ளனர்.  அதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் அபாயம்  ஏற்பட்டுள்ளது. மேலும், குளத் தின் அருகில் கட்டப்படும் அடுக் குமாடி குடியிருப்பிற்குள்ளும் மழைநீர் புகுந்து சேதம் ஏற்படும்  நிலையே உண்டாகும்.  அதேநேரம், அடுக்குமாடி குடியிருப்புக்குப் பாதை வசதி வேண்டும் என்றால், குளத்தை அழிக்காமல் மேம்பாலம் ஏற்ப டுத்தி குளத்தைப் பாதுகாக்கலாம். ஆகவே, குடிநீர் வடிகால் வாரி யம் மேம்பாலம் ஏற்படுத்தி தண்ணீர் தேங்கும் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்றி குளத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;