tamilnadu

img

தங்கநகைகளை மெருகேற்றித் தருவதாகக் கூறி மோசடி- ஒருவர் கைது

பவானி, மார்ச் 19- பவானி அருகே தங்க நகைகளை மெருகேற்றித்  தருவதாகக் கூறி மோசடி யில் ஈடுபட்ட ஒருவர் கைது  செய்யப்பட்டார்.  ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள  செங்காடுப் பகுதியைச்  சேர்ந்தவர்இந்திராணி. வீட்டிலேயே தையல்  தொழிலில் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், புதனன்று காலை யில் தங்கநகைகள், வெள்ளி கொலுசு, செம்பு உள்ளிட்டப்  பொருட்களுக்கு மெருகு ஏற்றி தருவதாக வடமாநி லத்தைச் சேர்ந்த இருவர் வந்துள்ளனர். இதனைய டுத்து இந்திராணி என்பவர் இருவரிடமும் வெள்ளி கொலுசு மற்றும் 20கிராம் கொண்ட தங்கநகை ஆகிய வற்றை கொடுத்துள்ளார். இதனை வாங்கிகொண்டு இளைஞர்கள் மெருகேற்றி விட்டு நகையை திருப்பி  கொடுத்துள்ளனர். இதை வாங்கி கொண்ட இந்திராணி  ஏமாற்றப்பட்டு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இதை யடுத்து சுதாரித்தக் கொண்ட இளைஞர்கள் இருவரும் அப்பகுதியை விட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது.  இதன் அடிப்படையில்  வழக்குப் பதிவு செய்த போலீ சார் தேடுதல் பணியில் ஈடுப்பட்டதில் பவானி பேருந்து  நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொரு வரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப் பட்ட லீனான் என்பவரை போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.