ஈரோடு, மார்ச் 16- ஈரோடு பேருந்து நிலை யத்தில் தினமும் நூற்றுக் கான பேருந்துகள் வந்து செல்வது வழக்கம். இத னால் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவு காணப்படும். இந்நிலையில் பேருந்துநிலையம் அருகே உள்ள பேக்கரியின் அருகில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை கண்ட பேக்கரி உரி மையாளர் காவல் துறை யினருக்கு தகவல் தெரி வித்தார். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோத னைக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.மக்கள் நட மாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் ஒருவர் உயிரிழந் திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.