tamilnadu

மரவள்ளி கிழங்குடன் லாரி கவிழ்ந்து விபத்து - போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு, ஏப். 22-சத்தியமங்கலம் கே.என்.பாளையம்பகுதியில் இருந்து கடம்பூர் செல்லும் வழியில் மரவள்ளிக்கிழங்கு ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து திங்களன்று விபத்திற்குள்ளானது. இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா பகுதிக்குட்பட்ட கே.என்.பாளையம் பகுதியில் இருந்து கடம்பூர் செல்லும்மலைப்பாதையானது மிக முக்கிய வழித்தடமாக உள்ளது. இதில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த மலைப்பாதையில் திங்களன்று காலை 7 மணியளவில் கடம்பூர் பகுதியில் இருந்து கே.என்.பாளையம் பகுதியை நோக்கி மரவள்ளிக்கிழங்கு ஏற்றிவந்து லாரி எதிர்பாராதவிதமாக சாலையின் இடது புறத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனால் லாரி முழுவதும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் மற்றும் உடன் இருந்த இரண்டு பேரும் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.இந்நிலையில், சாலையிலேயே வாகனம் கவிழ்ந்து நின்றால் காலை 7 மணி முதல்மதியம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்தகாவல்துறையினர் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியால் கவிழ்ந்த லாரியை மீட்டனர். மேலும் லாரியில் இருந்த மரவள்ளிக்கிழங்கு சுமார் 10 டன்க்கும் மேல் சாலையில் கொட்டியதை சரி செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஓட்டுநர்கள் கூறுகையில்,கடம்பூர் செல்லும் பாதை மிகவும் குறுகலானவை. மேலும், தற்போது சாலையைமேம்படுத்துவதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை ஒரு அடிக்கு மேல் அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால், சாலையை விரிவாக்கம் செய்யவில்லை. இதனால், சாலையை தவிர எங்கும் இறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தசாலையை அரசு அகலப்படுத்தி கொடுக்கவேண்டும். இதே போன்று மலைப்பாதை முழுவதும் பல இடங்களில் தடுப்புகள்அமைக்கப்படாமல் உள்ளது. இதனை சரிசெய்யவேண்டும். இல்லையென்றால் மேலும் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது என கூறினர்.

;