tamilnadu

img

காய்ச்சல் அதிகமுள்ளவர்களுக்கு தேர்வில் விலக்களிக்க முடிவு எடுக்கப்படும்

ஈரோடு:
காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வி லிருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர்முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மற்றும் கோபி காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களி டம் கூறியதாவது:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும்மாணவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை சோதனை செய்யத் தேவையான தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்கு இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்படுவதோடு, தேர்வு அறைப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். மாணவர்கள் காலை 9.45 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும். தேர்வு  எழுதவுள்ள மாணவர்களில், யார், யாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது எனகணக்கெடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல்அதிகமுள்ள மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூ லிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி, ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்திட வேண்டுமென பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துவது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது மட்டுமே சாத்தியமாக உள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் கூறி, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளிலிருந்து மாணவ, மாணவியர்களை நீக்கினால் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

;