tamilnadu

img

வெள்ளைப் பூச்சிகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை விளக்கம்

கோபி,ஜன.23- வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தென்னை மரங்களில் உண்டாகும் வெள்ளைப் பூச்சிகளின் தாக்குதல் குறித்தும், அதை கட்டுபடுத்தும் முறை குறித்தும் விவசாயிக ளுக்கு அறிவுரை வழங்கினர். ஈரோடு  மாவட்டத்தின்  சில  பகுதிகளில்  உள்ள  தென்னை மரங்களில் ரூக்கோஸ் என்ற சுருள் வெள்ளைப் பூச்சிகளால் நோய் தாக்குதல் இருந்து வந்தது. இந்நிலையில் இதை ஆய்வு செய்யுமாறு விவசாயிகள் வேளாண்மை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மாவட்டத்தின் சில பகுதிகளில் புதனன்று ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் தென்னை மரங்களில் வெள்ளைப் பூச்சிகளின் தாக்கம் அதிகளவில் இருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து வேளாண் பல்கலைக்கழக பேரா சிரியர்கள் விவசாயிகளிடம் பேசுகையில், தென்னை மரத்தில் வெள்ளைப் பூச்சிகளைத் தவிர நன்மை செய்யக் கூடிய பூச்சி இனங்களும், ஒட்டுண்ணிகளும் அதிக  அளவு உள்ளது. ஆகவே வெள்ளைப் பூச்சிகளைக் கட்டுப் படுத்த எந்த விதமான மருந்துகளையும் தெளிக்க வேண்டாம். மேலும் வெள்ளைப் பூச்சி வகையை கட்டுப்ப டுத்த தென்னை மரத்தின் இடையில் விளக்கெண்ணெய் தேய்க்கப்பட்ட மஞ்சள்நிற பாலிதீன் காகிதங்களை கட்டிவைத்தால் வெள்ளைப் பூச்சிகள் அளிந்துவிடும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்காமல் இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானதாக இருக்குமென வும் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

;