tamilnadu

img

தடப்பள்ளி பாசன வாய்க்கால் கரையில் அரிப்பு - சரிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

கோபி, ஆக. 30- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் பகுதியில் செல்லும் தடப் பள்ளி பாசன வாய்க் காலில் உருளை என்னு மிடத்தில் வாய்க்கால் கரை உடைந்து அரிப்பு ஏற்பட்டுள் ளது. எனவே, பெரும் பாதிப்பு ஏற்படும் முன்பு கரையை மணல் மூட்டைகள் கொண்டு சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பா ளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணையிலிந்து கடந்த ஆக.1 ஆம் தேதியன்று தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதல்போக சாகு படிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் நெல் விதைப்பு பணி யில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலை யில், பாரியூர் பகுதியில் செல்லும் தடப்பள்ளி வாய்க்காலில் உருளை என்னுமிடத்தில் தடப் பள்ளி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட மண் அரிப்பினால் வாய்க்கால் கரை உடைந்து சேத மடைந்துள்ளது. சேதமடைந்த வாய்க்கா லில் மண் அரிப்பு அதிகரித்து வருவதால் கரை முழுவதுமாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் பொதுப்பணித் துறை நிர்வாகம் தடப்பள்ளி வாய்க்கால் கரை யில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும். தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன்  உரிய கான்கிரீட் சுவர் எழுப்பி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;