tamilnadu

img

ஆற்றில் சாயக்கழிவு கலப்பது குறைந்துள்ளது...

ஈரோடு:
தமிழகத்தில் ஆறுகளில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச் சர் கே.சி.கருப்பணன் கூறினார். ஈரோடு மாவட்டம் கவுந் தப்பாடியில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவு வங்கி மூலமாக வணிகக் கடன், நகைக்கடன் போன்றன வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்களே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிக் கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆறுகளில் சாயக்கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் இரவு, பகலாக ரோந்து சென்று வருகிறார்கள். அப்போது சாயக் கழிவு கலப்பது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதனால் ஆறுகளில் சாயக்கழிவு கலப்பது 99 சதவீதம் தடுக்கப்பட்டு உள் ளது. சாயக்கழிவு கலப்பது தெரியவந்தால் 4 மணிநேரத்துக் குள் சம்பந்தப்பட்ட ஆலை மூடப்படும். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளதால், மாவட்ட ஆட்சியர்கள் உரிய ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்கள்.பொதுமக்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் முககவசங் களை துப்புரவு பணியாளர்கள் அகற்றி எரித்து விடுகிறார்கள்.இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

;