tamilnadu

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டவர் மீது குவியும் புகார்கள்

ஈரோடு,மே 8-ஈரோட்டில் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்ட தொழில்அதிபர் ராதாகிருஷ்ணன் மீது மேலும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோட்டில் கல்லூரி மாணவியுடன் நட்பாக பழகி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரில், ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரானராதாகிருஷ்ணன் (37) என்பவரை ஈரோடு மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். இதன்பின் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, இவரால் 100க்கும்மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.இதில் கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன், கல்லூரி மாணவியை மிரட்டி அவரது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய ராதாகிருஷ்ணனின் நண்பர்கள் யார்? இந்த மிரட்டல் சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ராதாகிருஷ்ணனால்பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடுகாவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்ஆனது. குடும்ப வறுமையின் காரணமாக நான் கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்கு சென்று வந்தேன். என் கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனை அறிந்து கொண்ட ராதாகிருஷ்ணன் என் கணவரிடம் பழகி, அவருக்கு மது வாங்கி கொடுத்துஅடிமையாக்கினார். பிறகு வீட்டுக்கு அடிக்கடி வந்து நல்லது செய்வதுபோல் நடித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்துவந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் கைதான விவகாரம் தொடர்பாக செய்தி வந்ததால் புகார் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து ரியல் எஸ்டேட் அதிபரான ராதாகிருஷ்ணன் மீது செவ்வாயன்று மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

;