கோபி, மே 19- கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் கொரோனா நோய் தடுப்புபணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றியதற்கு தூய்மைப் பணியாளர்கள், சுகா தாரப்பணியாளர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உணவு பறிமாறி கெளரவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் கொரோனா நோய் தடுப்பணியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இரவு, பகல் பாராமல் கண் காணித்து பல்வேறு பணிகளை மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சி அலு வலர்கள் மற்றும் காவல் துறையினர்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக தனியார் திருமண மண்டபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உணவுகள் பறிமாறி கௌரவித்தார்.
இதனைதொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், உங்களுடைய பணி சிறப்பானது என்றும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூய்மைப்பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு மருத்துவ காப்பீடு செய்துள்ளதாகவும், தூய்மைப் பணியாற்றியவர்கள் கொரோனா நோய் தொற்று உள்ள பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி கொரோனாவை விரட்டியுள்ளீர்கள் என்றும் பாராட்டினார். இந்நிகழ்வில், கோட்டாட்சியர் ஜெயராமன், காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், வட்டாட்சியர் சிவ சங்கர், காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.