tamilnadu

img

12-ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவு மாத இறுதிக்குள் வெளியாகும்...

ஈரோடு:
12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் கூறியதாவது:-12-ம் வகுப்பிற்கு 27-ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம், ஊரடங்கை கருத்தில் கொண்டு ஓராண்டில் இருந்து 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 6 ஆயிரத்து 19 பள்ளிகளில் இலவச கணினிகள் வழங்கப்பட்டுள் ளது. செல்போன் மற்றும் கணினி வழியாக பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் நிலை 2 ஆண்டுகளில் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

;