tamilnadu

img

விவசாயிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தும் மத்திய, மாநில அரசுகள் சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

ஈரோடு, ஜூன் 13- தமிழகத்தில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம், பெரிய புலியூர்  அருகே வளையக்காரன் பாளையத் தில் விளைநிலம் வழியாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக் காக சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமை யாளர்களான விவசாயிகளுக்கு தெரி விக்காமல் புதனன்று திடீரென பவர் கிரிட் அதிகாரிகள் உள்ளே புகுந்து பொக்லைன் இயந்திரம் மூலம் விளை நிலத்தில் குழி தோண்டினர். இதனைத் தடுக்க சென்ற விவசாயிகளைக் காவல் துறையினர் அராஜகமான முறையில் இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்நிலையில், வியாழனன்று போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ கம் முழுவதும் விவசாயத்திற்கும் விவ சாயிகளுக்கும் எதிரான ஒரு யுத்தத்தை  நடத்துவதுபோல மத்திய, மாநில அர சுகள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் உயர்  மின்னழுத்த கோபுரம் அமைப்பதற் கான ஏற்பாடுகளை செய்து வருகி றார்கள். உயர் மின் கோபுரம் அமைக் கும் பொழுது, விவசாய நிலத்தை சம் பந்தப்பட்ட விவசாயிகளிடம், உங்க ளுடைய நிலத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் என ஒப்புதல் பெறா மலும், அதற்கான இழப்பீடும் கொடுக்காமலும், அனுமதியுமின்றி காவல் துறையையும், வருவாய்த் துறையையும் பயன்படுத்தி உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் சர்வாதிகாரப் போக்குடன் நடை பெற்று வருகிறது.  இதுகுறித்து அதிகாரிகள் கூறும் பொழுது, விவசாயிகளின் அனுமதி இல்லாமல் அமைக்கலாம் என சட்டம் உள்ளது என்று கூறி வருகிறார்கள். இவ்வாறு விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றக்கூடிய நடவடிக் கைகளை இந்த அரசாங்கம் மேற் கொண்டு வருகிறது. புதனன்று விவ சாயிகள் நிலத்தில் ஒப்புதல் இல்லா மல் பணிகள் நடைபெற்று உள்ளது. தலையிட்டு தடுத்து நிறுத்தியவர்கள் காவல் துறையால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ள னர். ஆகவே இந்த செயலை அனு மதிக்க முடியாது. இது கட்சி பிரச் சனை அல்ல. விவசாயிகளின் பிரச் சனையாகும். அவர்களை அழைத்துப் பேசி எவ்வாறு தீர்வு காண வேண் டும் என யோசிக்க வேண்டும். அதை விடுத்துக் காவல் துறையை ஏவி, மிரட்டிப் பணிய வைத்து விடலாம் என்ற முயற்சிகளை மேற்கொண்டால், அது ஒருபோதும் வெற்றி பெறாது.  இதேபோல், கோவையில் இருந்து பெங்களூருக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்த திட்டமும் விவசாய நிலத்தில் தான் நடைமுறைப்படுத் தப்படுகிறது. விவசாய நிலத்தில் தான் அனைத்து திட்டங்களையும் அமல் படுத்தி வருகிறார்கள். இந்நிலை யில் விவசாயிகள் நிலத்தை விட்டு  வெளியேறுவதா அல்லது தொடர்ந்து விவசாயம் செய்வதா என்ற தவிப் பில் இருந்து வருகிறார்கள். மேலும், விழுப்புரம் மாவட்டம் அரக்கோ ணத்தில் இருந்து ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு 274 கிணறுகள் தோண்ட தனியார் நிறு வனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து அந்த விவசாயிகள் போராடி வரு கிறார்கள். இவ்வாறு ஹைட்ரோ கார் பன், உயர்மின் அழுத்த கோபுரம், எரிவாயு கொண்டு போவதற்கான குழாய் அமைப்பு என முற்றிலும் நிலத்தைவிட்டு விவசாயிகளை அப்புறப்படுத்துவதற்கானக் கொள் கையை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றுகிறது. இதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடத் தப்படும். இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்தார். முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் திருநாவுக்கரசு, திருப்பூர் நாடா ளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர் பெருமாள் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

;