tamilnadu

img

பழுதான போர்வெல் மோட்டரை சரிசெய்ய பர்கூர் மலைவாழ் மக்கள் கோரிக்கை

ஈரோடு, ஜூலை 30- குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பர்கூர் பகுதியில் பழுதாகி கிடக்கும் மின் மோட்டரை சரிசெய்ய வேண்டும் என பர்கூர் மலைப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா விற்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதி ஒன்னகரை பகுதியில் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப் பட்டது. ஆனால் அமைத்துக் கொடுக்கப் பட்ட சிறிது நாட்களிலேயே மோட்டார் பழுதடைந்து விட்டது. இதனால் குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல அப்பகுதியில் உள்ள கை பிடி அடிபம்பு மூலமாக தண்ணீரை எடுத்து வருகிறார்கள். இருப்பினும் அது போது மானதாக இல்லை. இதேபோல முத்துக்காடு பகுதியில் 25 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ளவர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுக ளையே நம்பி இருந்தனர். அதுவும் பழுத டைந்த காரணத்தால் இவர்களால் குடி நீரின்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் அவர்கள் அப்பகுதியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் உள்ள ஆற்று கொடிக்கால் பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்ப டுத்தி வருகிறார்கள். இப்பகுதியானது யானை, சிறுத்தை, காட்டு எருமை, பன்றி போன்ற வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும். உயிருக்கு ஆபத்தான நிலையிலும் குடிநீர் தேவைக்காகச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.  எனவே பழுதான மின் மோட்டார்களை சரி செய்து ஒன்னகரை மற்றும் முத்துக்காடு பகுதிமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.

;