tamilnadu

img

கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோபி, ஜன. 1- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடி வேரி தடுப்பணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடைவிதித்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் பல்வேறு இடங்களிலிருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புதனன்று ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால் காலை முதலே கொடிவேரி தடுப்பணை அருவிக்கு பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வர தொடங்கினர்.  ஆனால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் கொடிவேரி தடுப்பணை அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி தடுப்பணை அரு வியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள் ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் கொடிவேரி அணையில் புத்தாண்டை கொண்டாட  வந்த சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றதுடன் திரும்பிச்சென்றனர். மேலும் புத்தாண்டு வியாபா ரத்தை எதிர்பார்த்த அங்குள்ள தற்காலிக கடை களில் பெருப் இழப்பு ஏற்பட்டுவருவதாக கடை  உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

;