tamilnadu

img

கலை இலக்கியத் திருவிழா

ஈரோடு, மார்ச் 16- ஈரோட்டில், கலை இலக்கியத் திருவிழா நிகழ்ச்சி யானது சத்தியமங்கலம் கலை இலக்கிய பேரவை சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வடக்கு  பேட்டை திப்புசுல்தான் ரோட்டில் கலை இலக்கியத் திருவிழா நடபெற்றது. இந்நிகழ்ச்சிற்கு, ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் இனி ஒரு விதி செய்வோம் என்ற தலைப்பில் தமுஎகச மாவட்ட துணைச்செயலாளர் பதிமுகம் நாவலாசிரியர் கலைக்கோவன் உரையாற்றினார். மேலும், புதுகை பூபாலம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சத்தியமங்கலம் கலை இலக்கிய பேரவைச் செய லாளர் பி.வாசுதேவன், பொருளாளர் எஸ்.செந்தில் நாதன் மற்றும் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, ரங்கசாமி, விஜய குமார், எஸ்.ஏ.ராமதாஸ், அருண்குமார் மற்றும் சிஐடியு  மாவட்ட துணைத்தலைவர் ரகுராமன், மாதர் சங்க மாவட்ட  துணைத்தலைவர் ஆர்.கோமதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம்.அண்ணாதுரை, மலை வாழ் மக்கள் சங்க முன்னாள் தலைவர்  திருத்தணிகாசலம், விவசாய சங்கத் தலைவர் எஸ்.முத்துசாமி, வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட அமைப்பாளர்  சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.