tamilnadu

மீன்வள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு, ஜன. 11- ஈரோடு மாவட்ட  மீன்வளதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத் தில் மீன்வள உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் தற்போது காலியாக உள்ள 6 மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன.  தமிழில் எழுத, படிக்க மற்றும் பேச தெரிந் திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல் மற்றும் பழுதடைந்த வலைகளை சரி செய்ய தெரிந் திருக்க வேண்டும். மீன்வளத்துறை பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் ஏதேனும் பெற்றிருப்பின் அவர்களுக்கு முன் னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு ஜன.1 முதல் எஸ்.சி/எஸ்.வகுப்பைச்  சார்ந்தவர்கள் 35 வயதுக்குட்பட்டவராக வும், எம்பிசி/பி.சி வகுப்பைச் சார்ந்தவர்கள் 32 வயதுக்குட்பட்டவாராக இருக்க வேண்டும்.  மேலும், இனசுழற்சி அடிப்படையில் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபி னர் முன்னுரிமை அற்றவர் பொது-2, பிற்ப டுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ் லீம்கள் தவிர) முன்னுரிமை அற்றவர் பொது-1, பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம் கள் முன்னுரிமை பெற்றவர் பொது-1, ஆதி திராவிடர் முன்னுரிமை அற்றவர் பொது-1, பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) முன்னுரிமை அற்றவர் மகளிர் -1 விண்ணப்பங்களை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது  மின் னஞ்சல் வாயிலாக இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.  எனவே, விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை, வயது நிரூ பண சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப் பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட இரண்டு வண்ண புகைப்படத்தினை இணைத்து மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 42 சுப்புராம் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஈரோடு-638011 என்ற முகவரிக்கு பிப்ர வரி 4ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில், விண்ணப்ப உறையின் மேல் ஈரோடு மாவட்ட மீன்வள உதவியாளர் பணி யிடத்திற்கு விண்ணப்பித்தல்” என எழுதி நேரிலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அனுப்பிடலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;