tamilnadu

img

கோபியில் அனைத்து கடைகளும் அடைப்பு

கோபி, மார்ச் 23- கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையப்பகுதியில் பேக்கரி உணவ கம் பழக்கடை என அனைத்து கடைக ளும் திங்களன்றும் அடைக்கப்பட்டி ருந்தது. ஆனால், தினசரி காய்கறி சந்தை வழக்கம்போல் செயல்பட்டது.  கொரோனா அச்சுறுத்தல் காரண மாக மத்திய அரசு தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க வேண் டும் என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு இது குறித்து எவ்வித விரிவான அறிக்கையும் வெளி யிடாத காரணத்தால், இம்மாவட்டங்க ளில் ஊரடங்கு தொடருமா? இல் லையா? என்ற எண்ணத்தில் வணி கர்கள் இருந்தனர். பொதுமக்களும் வெளியில் வர தயக்கம் காட்டி வரு கின்றனர்.  இந்நிலையில், ஞாயிறன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு 100 சதவி கிதம் வெற்றி பெற்ற நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் திங்களன் றும் பேருந்து நிலையப்பகுதியில் செயல்படும் தேநீர் விடுதிகள், பழக் கடைகள் மற்றும் உணவகம் போன்ற  அனைத்து கடைகளும் திறக்கப்பட வில்லை. மத்திய அரசு பரிந்துரையில் உள்ள ஈரோடு மாவட்டத்திற்கு மாநில அரசு எந்த நேரத்தில் வேண்டுமானா லும், தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற அச்சத்தில் வணிகர்களும், பொது மக்களும் உள்ளனர். மேலும், குறைந்தளவே இயக்கப்படும் பேருந்து களில் பயணிகளும் குறைந்தளவே பய ணம் செய்தனர். கிராமங்களிலிருந்து நகர் பகுதிக்கு வருவோரின் எண்ணிக் கையும் வெகுவாகக் குறைந்தே காணப்படுகிறது.  ஆனால், தடை உத்தரவு வரும்  என்ற எண்ணத்தில் அதிகாலையி லேயே காய்கறி சந்தைகளில் மக்கள் குவிந்தனர்.