tamilnadu

img

தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டது - அமைச்சர் செங்கோட்டையன் 

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் காரணத்தால் பள்ளி பாடத்திட்டங்களில் சுமார் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டத்தை கருத்தில் கொண்டு 2020-21 கல்வி ஆண்டில் பாடத்திட்டத்தைக் குறைக்க 18 பேர் கொண்ட குழு கடந்த மாதம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அதனடிப்படையில், பாடத்திட்டம் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கல்விக்கான முன்னேற்ற வழியை மதிப்பீடு செய்யத் தமிழக அரசு மே மாதத்தில் 12 ஆம் தேதி பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், பள்ளிகளைத் துவங்கத் தாமதம் , அதற்கான நேரத்தை ஈடுசெய்வது குறித்த பரிசீலனை செய்யப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் ஆறு மணி நேரம் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்களில் தங்கள் சந்தேகங்களைப் பெற முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

;