tamilnadu

அரசு ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

ஈரோடு, ஜன. 11- அரசு பெண் ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். ஈரோடு, முனிசிபல் காலனி, வள்ளலார் வீதியை சேர்ந்த தியாகராஜ் என்பவரின் மனைவி தமிழ்மணி செல்வி(45). இவர் சித் தோடு ஆவின் நிறுவனத்தில்  உள்ள ஆய்வ கத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நாமக்கல் மாவட் டத்தில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், பிற்பகலில் வீட் டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப் பது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு, வீரப்பன் சத்தி ரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலை யில், தமிழ்மணி செல்வி வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் களை காவலர்கள் ஆய்வு செய்தபோது, 2  மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடு பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொ டர்ந்து அந்த மர்மநபர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல்  துணை கண்காணிப்பாளர் சக்திகணேசன் கூறுகையில், ஆவின் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் 2  மர்மநபர்கள் ஈடுபட்டு இருப்பது சிசிடிவி  கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேரும் பழைய குற்றவாளிகள் என சந்தேகிக்கிறோம். அதனால்,கொள் ளையில் ஈடுபட்ட நபர்களும், அதற்கு உடந்தையாக மற்றும் 2பேர் என4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது, என்றார்.

;